Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
மீல் மேக்கரும், பட்டாணியும் இருக்கா? அப்ப அத வெச்சு வெள்ளை குருமா செய்யுங்க..
Meal Maker Pattani Vellai Kurma Recipe: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரி தான் சைடு டிஷ் செய்வீர்களா? சற்று வித்தியாசமாக அதே சமயம் வீடே மணக்கும் வகையில் ஒரு சுவையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் மீல் மேக்கரும், பட்டாணியும் இருக்கா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு வெள்ளை குருமாவை செய்யுங்கள். இந்த மீல் மேக்கர் பட்டாணி வெள்ளை குருமா செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

முக்கியமாக இந்த குருமாவை செய்தால், ஒரு சப்பாத்தி சாப்பிடும் உங்கள் குழந்தை 2 சப்பாத்தியை சாப்பிடுவார்கள். உங்களுக்கு மீல் மேக்கர் பட்டாணி வெள்ளை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே மீல் மேக்கர் பட்டாணி வெள்ளை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 3/4-1 கப்
* பச்சை பட்டாணி - 1/2 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* மல்லி தூள் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* கிராம்பு - 4-5
* பட்டை - 2 இன்ச்
* பிரியாணி இலை - 1
* அன்னாசிப்பூ - சிறிது
* பச்சை ஏலக்காய் - 1
* கல்பாசி - 1 சிறிய துண்டு
வதக்கி அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 6 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 7-8
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 4-5 பல்
* சோம்பு - 1.5 டீஸ்பூன்
* கசகசா - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 5-6
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து, மீல் மேக்கரை போட்டு
சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். மீல் மேக்கர் நன்கு உப்பி
பெரிதானதும், நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி,
எஞ்சிய நீரை பிழிந்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், சோம்பு, கசகசா சேர்த்து வதக்கி,
துருவிய தேங்காய், முந்திரி, பொட்டுக்கடலை சேர்த்து ஒரு நிமிடம்
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை
ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து
தாளித்து, அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
வதக்க வேண்டும்.
* பின் பச்சை பட்டாணியை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். அதன் பின்
தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம் வதக்கி,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு
கிளறி, 1 கப் நீரை ஊற்றி, மிதமான தீயில் வைத்து, 5 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து மீல் மேக்கரை சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில்
வைத்து வேக வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவி, எலுமிச்சை
சாற்றினை சேர்த்து கிளறினால், சுவையான மீல் மேக்கர் பட்டாணி வெள்ளை
குருமா தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications











