Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
மீல் மேக்கரை வைச்சு இந்த மாதிரி குருமா செய்யுங்க... சாதத்துக்கு சிக்கன் குருமாவை விட சூப்பரா இருக்கும்...!
Meal Maker Kurma Recipe in Tamil: மதிய உணவுக்கு என்ன செய்யலாம் என்பதுதான் 11 மணிக்கு மேல் அனைத்து குடும்பத் தலைவிகளின் முக்கிய யோசனையாக இருக்கும். சில உணவுகள் மட்டும்தான் சாதம் மட்டுமின்றி தோசை, சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுக்கும் சிறந்த சைடிஷாக இருக்கும். அப்படி இரண்டுக்குமே சூப்பராக சைடிஷாக இருக்கும் ஒரு பொருள்தான் மீல் மேக்கர்.
மீல் மேக்கரை வைத்து இந்த மாதிரி ஒரு கிரேவி செய்தால் அது மதிய உணவிற்கு மட்டுமின்றி இரவு சப்பாத்திக்கும் சிறந்த சைடிஷாக இருக்கும். ஏனெனில் இந்த மீல் மேக்கர் கிரேவி சிக்கன் குருமாவை மிஞ்சும் சுவையில் இருக்கும். மீல் மேக்கரில் அதிகளவு புரோட்டின் இருப்பதால் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் இது சிறந்த தேர்வாக இருக்கும். வீடே மணக்கும் சுவையில் சிக்கன் குருமாவை மிஞ்சும் அட்டகாசமான மீல் மேக்கர் குருமாவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- மீல்மேக்கர் - 150 கிராம்
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
- மல்லித்தூள் - 3 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 11/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்
- தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
- முந்திரிப்பருப்பு - 6
- உப்பு - தேவையான அளவு
- பூண்டு - 10 பல்
- இஞ்சி - 1 சிறிய துண்டு
- பட்டை - 2 துண்டு
- கல்பாசி - 1 ஸ்பூன்
- கிராம்பு - 4
- சோம்பு - 1 ஸ்பூன்
- சோம்பு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்:
- சின்ன வெங்காயம் - 15
- மிளகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- தக்காளி - 2
செய்முறை:
- தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மீல் மேக்கர், சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின்பு தண்ணீரை வடிகட்டி பச்சைத் தண்ணீரில் இரண்டு தடவை அலசி தண்ணீரை நன்றாக பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
- கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி ஆறவைத்து அதனுடன் தேங்காய் துருவல், முந்திரிப் பருப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் இஞ்சி, பூண்டு, பட்டை, சோம்பு, கிராம்பு, கல்பாசி சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- குக்கரை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றி பட்டை, சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கி விட்டு அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
- அதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
- பின்னர் மீல்மேக்கர் சேர்த்து அதையும் சிறிது வதக்கி விட்டு அரைத்து வைத்துள்ள தக்காளி மசாலா விழுது, மற்றும் மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துவிட்டு குக்கரை மூடிவிடவும்.
- இரண்டு விசில் விட்டு இறக்கி விசில் அடங்கியதும் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவினால் அருமையான மீல்மேக்கர் குழம்பு ரெடி.
- இந்த மீல்மேக்கர் குழம்பு சிக்கன் குழம்பு போல சூப்பராக இருக்கும்.
- இந்த குழம்பு சாதம், இட்லி, சப்பாத்தி என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











