Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
சப்பாத்தி, பூரிக்கு நச்சுன்னு ஒரு சைடு டிஷ் பண்ணணுமா? அப்ப பட்டாணி காளான் மசாலா செய்யுங்க..
Matar Mushroom Masala: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போறீங்களா? அந்த சப்பாத்திக்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்து கொடுத்து வீட்டில் உள்ளோரை அசத்த நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு காளான் பிடிக்குமா? வீட்டில் பட்டாணி உள்ளதா? அப்படியானால் அந்த பட்டாணியுடன் காளானை சேர்த்து மசாலா செய்யுங்கள். இந்த பட்டாணி காளான் மசாலா செய்வது மிகவும் ஈஸி.

மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது மாலை வேளையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் சீக்கிரம் செய்யக்கூடியவாறு எளிமையான செய்முறையைக் கொண்டது.
உங்களுக்கு பட்டாணி காளான் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பட்டாணி காளான் மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் - 200 கிராம் (நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 200 கிராம்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* பால் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கசூரி மெத்தி மற்றும் இஞ்சியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம்
நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய காளானை சேர்த்து மிதமான தீயில் வைத்து, 10
நிமிடம் காளானை வேக வைக்க வேண்டும். காளான் நன்கு நீர் விட்டு
வெந்ததும், அதில் பச்சை பட்டாணியை சேர்த்து கிளற வேண்டும்.
* பின்பு மஞ்சள் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 15-20
நிமிடம் வேக வைக்க வேண்டும். அப்படி வேக வைக்கும் போது, 5
நிமிடத்திற்கு ஒருமுறை கிளறி விட வேண்டும்.
* நீர் முழுவதும் வற்றியதும், அதில் பாலை ஊற்றி கிளறி, குறைவான தீயில்
வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, மேல கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான பட்டாணி காளான் மசாலா தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications











