டயட்டில் இருப்போருக்கான... மசாலா ஓட்ஸ்

எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக பலர் ஓட்ஸை விருப்பமின்றி சாப்பிடுவார்கள். நீங்களும் அப்படி பிடிக்காமல் தான் சாப்பிடுகிறீர்களா? அப்படியானால் அந்த ஓட்ஸைக் கொண்டு ஒரு சுவையான மசாலா ஓட்ஸ் தயாரித்து சாப்பிடுங்கள்.

Posted By:

உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர் தங்களின் உணவில் ஓட்ஸை அதிகம் சேர்ப்பார்கள். சிலருக்கு ஓட்ஸின் சுவை பிடிக்காமல் இருக்கும். ஆனால் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக ஓட்ஸை விருப்பமின்றி சாப்பிடுவார்கள். நீங்களும் அப்படி பிடிக்காமல் தான் சாப்பிடுகிறீர்களா? அப்படியானால் இனிமேல் அப்படி சாப்பிடாதீர்கள். மாறாக அந்த ஓட்ஸைக் கொண்டு ஒரு சுவையான மசாலா ஓட்ஸ் தயாரித்து சாப்பிடுங்கள். இந்த மசாலா ஓட்ஸை காலை உணவாக மட்டுமின்றி, இரவு உணவாகவும் சாப்பிடலாம்.

Masala Oats Recipe In Tamil

சொல்லப்போனால் இரவு நேரத்தில் சாப்பிட்டால், இரவு நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். உங்களுக்கு மசாலா ஓட்ஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா ஓட்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நெய் அல்லது எண்ணெய் - 1 டீஸ்பூன்

* சீரகம் - 1 டீஸ்பூன்

* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)

* பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கியது)

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்

* கரம் மசாலா - 1 டீஸ்பூன்

* ஓட்ஸ் - 1 கப்

* தண்ணீர் - 3 கப்

* உப்பு - சுவைக்கேற்ப

* கொத்தமல்லி - சிறிது

* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* பிறகு அதில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின் அதில் கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள், சீரகத் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

* பின்பு அதில் ஓட்ஸை சேர்த்து நன்கு கிளறி, நீரை ஊற்றி, ஓட்ஸை வேக வைக்க வேண்டும்.

* ஓட்ஸ் நன்கு வெந்ததும், அதில் மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், மசாலா ஓட்ஸ் தயார்.

Image Courtesy: yummytummyaarthi

[ of 5 - Users]
Story first published: Tuesday, February 28, 2023, 18:45 [IST]
Desktop Bottom Promotion