Latest Updates
-
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...!
வீட்டுல ஒரு ஆளுக்கு மட்டும் என்ன சமைக்குறதுன்னு தெரியலையா? அப்ப இந்த மசாலா முட்டை செய்யுங்க..
Masala Egg Soya Recipe In Tamil: மதியம் சிம்பிளா சமைக்க நினைக்கிறீங்களா? அதுவும் வீட்டில் ஒரு ஆளுக்கு மட்டும் என்ன சமைத்து சாப்பிடுவது என்று யோசிக்கிறீர்களா? வீட்டில் முட்டையும், மீல் மேக்கரும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு நாவிற்கு விருந்தளிக்கும் வகையில் மசாலா முட்டை சோயாவை செய்து சாப்பிடுங்கள்.
அதுவும் நல்ல சூடான சாதத்துடன் இந்த மசாலாவை சேர்த்து சாப்பிடும் போது ருசி அவ்வளவு பிரமாதமாக இருக்கும். முக்கியமாக டக்கென்று ஒரு சமையலை செய்ய நினைத்தால், இதை செய்யலாம். அந்த அளவில் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு மசாலா முட்டை சோயாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா முட்டை சோயாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 3
* மீல் மேக்கர் - 1 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சின்ன வெங்காயம் - 1/2 கப் (இடித்துக் கொள்ளவும்)
* பூண்டு - 6 பல் (இடித்துக் கொள்ளவும்)
* பச்சை மிளகாய் - 2 (இடித்துக் கொள்ளவும்)
* தண்ணீர் - 2-3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், 3 முட்டைகளை உடைத்து ஊற்றி, புர்ஜி போன்று
வதக்கி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் ஊற வைத்த மீல் மேக்கரை சேர்த்து ரோஸ்ட் செய்து
அதையும் ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பிறகு அதில் இடித்து வைத்துள்ள சின்ன வெங்காயம், பூண்டு மற்றும்
பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, வெங்காயம் நன்கு வதங்கி
பொன்னிறமானதும், அதில் 2-3 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி கிளறி, மசாலா
நன்கு கொதித்ததும், அதில் வதக்கி வைத்துள்ள முட்டை புர்ஜி மற்றும்
மீல் மேக்கரை சேர்த்து நன்கு கிளறி, 2-3 நிமிடம் வேக வைத்து
இறக்கினால், சுவையான மசாலா முட்டை சோயா தயார்.



Click it and Unblock the Notifications











