முட்டையும், பிரட்டும் இருந்தா.. காலையில் இந்த மாதிரி பிரட் டோஸ்ட் செய்யுங்க.. செம சூப்பரா இருக்கும்..

Posted By:

Masala Egg Bread Toast Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? டக்கென்று காலை டிபனை முடிக்க வேண்டுமா? வீட்டில் பிரட்டும், முட்டையும் உள்ளதா?

அப்படியானால் அந்த பிரட் மற்றும் முட்டை கொண்டு அட்டகாசமான சுவையில் மசாலா முட்டை பிரட் டோஸ்ட் செய்யுங்கள். இந்த பிரட் டோஸ்ட் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் இது சத்தானதும் கூட.

Masala Egg Bread Toast How To Make a Masala Egg Bread Toast Recipe

உங்களுக்கு மசாலா முட்டை பிரட் டோஸ்ட் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா முட்டை பிரட் டோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* முட்டை - 5
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - தேவையான அளவு
* வெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகுத் தூள், சில்லி ப்ளேக்ஸ், உப்பு, சிறிது கொத்தமல்லி சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு தட்டில் ஒரு பிரட் துண்டை வைத்து, அதன் மேல் அடித்து வைத்துள்ள முட்டை கலவையை மெதுவாக ஊற்றி பரப்பி விட வேண்டும்.
* பிறகு ஒரு தோசைக் கல்லை அல்லது தவாவை அடுப்பில் வைத்து சூடானதும், சிறிது வெண்ணெய் சேர்த்து உருகியதும், அந்த முட்டை கலவை பரப்பிய பிரட் துண்டின் பகுதி தவாவில் படும்படி வைத்து, பிரட்டின் மறுபுறத்தில் முட்டை கலவையை ஊற்றி பரப்பி, மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் வெந்ததும், திருப்பிப் போட்டு அழுத்தி விட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.
* இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் தவாவில் போட்டு எடுத்தால், சுவையான மசாலா முட்டை பிரட் டோஸ்ட் தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, November 3, 2024, 8:17 [IST]
Desktop Bottom Promotion