பிபி, சுகர் நோயாளிகளுக்கான ருசியான மசாலா சப்பாத்தி.. எப்படி செய்யணும்-ன்னு பாருங்க...

Posted By:

Masala Chapati Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சற்று ஆரோக்கியமான அதே சமயம் சுவையான காலை உணவை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வெந்தயக்கீரை இருந்தால், அதைக் கொண்டு மசாலா சப்பாத்தியை செய்யுங்கள்.

இந்த மசாலா சப்பாத்தி சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இதை காலை உணவாக உட்கொள்ளும் போது இன்னும் அற்புதமாக இருக்கும். இந்த சப்பாத்திக்கு சிறந்த சைடு டிஷ் என்றால் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி தான். இந்த சப்பாத்தி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதால், காலையில் கூட இதை செய்யலாம்.

Masala Chapati How To Make a Masala Chapati Recipe

உங்களுக்கு மசாலா சப்பாத்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கோதுமை மாவு - 2 கப்
* கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* வெந்தயக் கீரை - 2 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* நெய் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு, 1 டீஸ்பூன் நெய் மற்றும் 2 கைப்பிடி வெந்தயக்கீரை சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதன் மேல் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தடவி, மூடி வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, மாவை நன்கு கைகளால் அழுத்தி பிசைய வேண்டும்.
* பின்பு சிறிது மாவை எடுத்து உருட்டி, நன்கு மெல்லிசாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியைப் போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான மசாலா சப்பாத்தி தயார். இதேப் போன்று அனைத்து மாவையும் உருட்டி தேய்த்து சப்பாத்தியாக போட்டு எடுங்கள்.

Image Courtesy: Apoorvaa's Nalabagam

[ of 5 - Users]
Desktop Bottom Promotion