Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
Masala Bun Dosa With Ulunthu Chutney Recipe In Tamil: காலையில் எப்படி டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரி இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் டிபன் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் மசாலா பன் தோசையை செய்து சாப்பிடுங்கள். இந்த தோசைக்கு உளுந்து சட்னி அற்புதமான காம்பினேஷனாக இருக்கும். இந்த காம்போவை காலை வேளையில் செய்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த மசாலா பன் தோசை மற்றும் உளுந்து சட்னி ரெசிபி குறித்து அபூர்வாஸ் விருந்து என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா பன் தோசை மற்றும் உளுந்து சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* ரவா - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
பன் தோசைக்கு...
* கோதுமை மாவு - 1/4 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* கேரட் - 1 (துருவியது)
* சின்ன தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* சிறிய அளவு வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சின்ன உருளைக்கிழங்கு - 1 (துருவியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள்- 1/4
* கரம் மசாலா - 1/4
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
மேலே தூவுவதற்கு...
* சிறிய அளவு வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
சட்னிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 6
* வெங்காயம் - 3
* பெரிய தக்காளி - 1
* கறிவேப்பிலை - 2 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் ரவையை எடுத்துக் கொண்டு,
அத்துடன் ரவை மூழ்கும் அளவில் தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து, மூடி
வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் சட்னியை செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில்
வைத்து, அதில், 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம்
பருப்பை சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் வரமிளகாயை சேர்த்து வதக்கி, பின் அதில் நறுக்கிய
வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து முதலில்
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வறுத்த உளுத்தம் பருப்பை சேர்த்து சற்று கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, ஜாரில் தேவையான அளவு
நீரை ஊற்றி அலசி, சட்னியுடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சட்னி தாளிப்பதற்கு
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் தாளித்ததை சட்னியுடன் சேர்த்து கலந்தால், உளுந்து சட்னி
தயார்.
* அடுத்து ஊற வைத்த ரவையை நன்கு மசித்து விட வேண்டும். பின் அதில் 1/4
கப் கோதுமை மாவை சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை
ஊற்றி கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய், கேரட், உருளைக்கிழங்கு, பொடியாக
நறுக்கிய தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, ஆப்ப சோடா
மற்றும் சிறிது கொத்தமல்லியைத் தூவி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து
ஊற்றி, மேலே வெங்காய கலவையை பரப்பி, மிதமான தீயில் வைத்து வேக வைக்க
வேண்டும்.
* பின் திருப்பி போட்டு மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால், மசாலா
பன் தோசை தயார்.



Click it and Unblock the Notifications