Latest Updates
-
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
பெங்காலி வெஜ் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஏன் செருப்பை அவசியம் கழட்ட வேண்டும் தெரியுமா? இதுல பல ரகசியம் இருக்கு -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா - எப்படி செய்யணும் தெரியுமா? -
உங்க கழுத்து கருப்பா இருக்குதா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது.. -
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா?
மாங்காய் வாங்குனா கொட்டைய தூக்கி எரியாம இந்த மாதிரி சட்னி அரையுங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்...!
Mango Seed Chutney Recipe in Tamil: மாங்காயை வைத்து சாதம், துவையல், பச்சடி, ஊறுகாய், செய்திருப்போம். இவ்வளவு ஏன் சட்னி கூட செய்திருப்போம். கேரளா பாணியில் சம்மங்கி செய்து கூட சாப்பிட்டிருப்போம். ஏன் மாம்பழத்தை வைத்து கூட சட்னி, ஜூஸ், ஐஸ் கிரீம், கேசரி மற்றும் பாயாசம் போன்றவற்றை செய்திருப்போம். ஆனால் நாம் வீணாக தூக்கி எரியும் மாங்கொட்டை வைத்து சுவையான துவையல் செய்யலாம் தெரியுமா உங்களுக்கு? சரி வாங்க மாங்கொட்டை துவையல் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையானவை:
- மாங்கொட்டை - 2 அல்லது 3
- புளி - தேவையான அளவு (பெரிய நெல்லிக்காய் அளவு)
- காய்ந்த மிளகாய் - 5
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
வறுத்து சேர்க்க:
- உளுந்து - 1 டீ ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 டீ ஸ்பூன்
- தேங்காய் - ½ மூடி
- பூண்டு - 2 அல்லது 3 பல்
செய்முறை:
- பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.
- தேங்காயை உங்கள் விருப்பப்படி துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
- மிளகாயின் காம்பு பகுதியை சுத்தம் செய்து இரண்டு மூன்றாக கிள்ளி வைக்கவும்.
- புளியை தண்ணீரில் சேர்த்து மேற்பகுதியில் இருக்கும் தூசி மற்றும் ஓடு போகும் படி கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
- மாங்கொட்டையை நன்றாக கழுவி காய வைத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
- நன்றாக காய்ந்ததும் அதை உடைத்தால் அதன் உள்ளே பெரிய பருப்பு போன்று இருக்கும் பகுதியை எடுத்து கொள்ளுங்கள்.
- மிக்ஸி ஜாரில் அரைப்பதாக இருந்தால் அந்த பருப்பை நன்றாக கழுவி சிறுசிறு துண்டுகளாக உடைத்து தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள்.
- குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்.
- அம்மியில் தான் அரைக்க போகிறீர்கள் என்றால் பருப்பை நன்றாக கழுவி எடுத்தால் போதும். ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் உளுந்து சேர்த்து நன்கு சிவக்கும் படி வறுத்து தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.
- பின் கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இதை உளுந்துடன் சேர்த்து ஆற வைக்கவும்.
- பூண்டையும் அதனுடன் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
- பின் அதனுடன் தேங்காய் சேர்த்து சிறிது நேரம் கிளறி வறுத்து வைத்த பருப்புடன் சேர்க்கவும்.
- வறுத்த பொருட்களை எல்லாம் நன்றாக ஆற வைக்கவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து ஆற வைத்த உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பூண்டு, மற்றும் தேங்காயை சேர்க்கவும்.
- அதனுடன் மாங்கொட்டை பருப்பு, காய்ந்த மிளகாய், புளி, பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- தேவைப்பட்டால் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியானபதத்தில் அரைத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும்.
- இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு ஏற்ற மாங்கொட்டை துவையல் ரெடி!



Click it and Unblock the Notifications