Just In
- 27 min ago
ஜூலை மாசம் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப மோசமான மாசமா இருக்குமாம்.. கவனமா இருங்க...
- 1 hr ago
இந்த பொருட்களை தெரியாம கூட தயிருடன் சேர்த்து சாப்பிடாதீங்க... இல்லனா உயிருக்கே ஆபத்தாகிடும்...!
- 8 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்...
- 18 hrs ago
ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா
Don't Miss
- Movies
ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.. கேன்சர் பயத்தை கொடுத்த சம்பவம்!
- News
நெருங்கும் கர்நாடக தேர்தல்.. பரிதாப நிலையில் பாஜக! சீக்ரெட் ரிப்போர்டால் தாமரை தலைமை அதிர்ச்சி
- Sports
இந்திய அணிக்கு திரும்பும் கேஎல் ராகுல்.. எப்போது விளையாடுவார்? முக்கிய அப்டேட் வெளியானது
- Finance
உங்கள் வீட்டில் போர்வெல் இருக்குதா? ஜூன் 30க்குள் இதை செய்யாவிட்டால் நடவடிக்கை!
- Technology
Flipkart-இல் அடுத்த 3 நாட்களுக்கு பல ஸ்மார்ட்போன்கள் மீது ஆபர் மழை; இதோ லிஸ்ட்!
- Automobiles
மாருதி எஸ் பிரஸ்ஸோ பாதுகாப்பு விஷயத்தில் எவ்ளோ ஸ்கோரை வாங்கியிருக்கு? குளோபல் என்சிஏபி-யின் லேட்டஸ்ட் ரிசல்ட்!
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
Mango-Lime Granita Recipe : மேங்கோ கிரனிட்டா
கோடையில் மாம்பழ சீசன் என்பதால் மாம்பழங்கள் விலைக்குறைவில் கிடைக்கும். அதோடு மாம்பழம் பலருக்கும் விருப்பமான ஓர் பழம். மாம்பழ பிரியர்கள் மாம்பழங்களை எந்த வடிவில் கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் மாம்பழத்தைக் கொண்டு ஒரு வித்தியாசமான டெசர்ட்டை சாப்பிட விரும்பினால், அதைக் கொண்டு மேங்கோ கிரனிட்டா செய்து சாப்பிடுங்கள்.
உங்களுக்கு மேங்கோ கிரனிட்டா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மேங்கோ கிரனிட்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுஙகள்.
தேவையான பொருட்கள்:
* கனிந்த மாம்பழங்கள் - 2 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* சர்க்கரை - 1/2 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் மாம்பழங்களை பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு சாஸ் பேனில் சர்க்கரை, எலுமிச்சை சாறு மற்றும் நீரை எடுத்து, அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* சர்க்கரை கரைந்ததும், அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த மாம்பழ கூழை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரீசரில் 3-4 மணிநேரம் வைக்க வேண்டும்.
* பின் அதை வெளியே எடுத்து, முள்கரண்டியைக் கொண்டு கீறி விட்டு, பின் அதைப் பரிமாறினால், மேங்கோ கிரனிட்டா தயார்.
Image Courtesy: yummytummyaarthi