Just In
- 31 min ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 53 min ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 1 hr ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- 2 hrs ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
Don't Miss
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
Mango-Lime Granita Recipe : மேங்கோ கிரனிட்டா
மாம்பழ பிரியர்கள் மாம்பழங்களை எந்த வடிவில் கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் மாம்பழத்தைக் கொண்டு ஒரு வித்தியாசமான டெசர்ட்டை சாப்பிட விரும்பினால், அதைக் கொண்டு மேங்கோ கிரனிட்டா செய்து சாப்பிடுங்கள்.
கோடையில் மாம்பழ சீசன் என்பதால் மாம்பழங்கள் விலைக்குறைவில் கிடைக்கும். அதோடு மாம்பழம் பலருக்கும் விருப்பமான ஓர் பழம். மாம்பழ பிரியர்கள் மாம்பழங்களை எந்த வடிவில் கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் மாம்பழத்தைக் கொண்டு ஒரு வித்தியாசமான டெசர்ட்டை சாப்பிட விரும்பினால், அதைக் கொண்டு மேங்கோ கிரனிட்டா செய்து சாப்பிடுங்கள்.
உங்களுக்கு மேங்கோ கிரனிட்டா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மேங்கோ கிரனிட்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுஙகள்.
தேவையான பொருட்கள்:
* கனிந்த மாம்பழங்கள் - 2 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* சர்க்கரை - 1/2 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் மாம்பழங்களை பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு சாஸ் பேனில் சர்க்கரை, எலுமிச்சை சாறு மற்றும் நீரை எடுத்து, அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* சர்க்கரை கரைந்ததும், அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த மாம்பழ கூழை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரீசரில் 3-4 மணிநேரம் வைக்க வேண்டும்.
* பின் அதை வெளியே எடுத்து, முள்கரண்டியைக் கொண்டு கீறி விட்டு, பின் அதைப் பரிமாறினால், மேங்கோ கிரனிட்டா தயார்.
Image Courtesy: yummytummyaarthi