Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
மங்களூர் ஸ்டைல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த மாதிரி செய்யுங்க... இட்லி, தோசைக்கு செம சைடிஷா இருக்கும்...!
Mangalore Coconut Chutney Recipe in Tamil: இன்று இரவு அல்லது நாளை காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? எப்போதும் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ஏதாவது சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தேங்காயும், புளியும் உள்ளதா? அப்படி இருந்தால் சூப்பரான மங்களூர் ஸ்டைல் ஸ்பெஷல் சட்னியை செய்து விடலாம்.
இதுவரை நீங்கள் வழக்கமான சட்னியைத்தான் இட்லி, தோசைக்கு செய்திருப்பீர்கள். ஆனால் இந்த மங்களூர் ஸ்டைல் சட்னி வழக்கமான சட்னி போல அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக காரம், புளிப்பு மற்றும் இனிப்பு என அனைத்து சுவையும் கலந்திருக்கும். இந்த இனிப்பு தேங்காய் சட்னி மங்களூரில் மிகவும் பிரபலமானது. இந்த சட்னி சுவையானதாக இருப்பதோடு இதை செய்வதும் மிகவும் எளிதானது.

உங்களுக்கு மங்களூர் ஸ்டைல் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் இனிப்பு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1/2 கப் துருவிய தேங்காய்
- 2 வர மிளகாய்
- 1/4 டீஸ்பூன் கடுகு
- 1 சிறிய எலுமிச்சை அளவு வெல்லம்
- 1 நெல்லிக்காய் அளவு புளி
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 1 காய்ந்த மிளகாய்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 2 டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை
- 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
செய்முறை:
- முதலில் தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், வர மிளகாய் மற்றும் கடுகு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதை தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு அகன்ற வாணலியில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் வர மிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு தாளிக்கவும்.
- பருப்பு நிறம் மாறியதும் வேர்க்கடலையை சேர்த்து தாளிப்பு தயார் செய்யவும்.
- தாளிப்பு தயாரானதும், மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
- இப்போது அரைத்த தேங்காய் விழுது, உப்பு, வெல்லம் மற்றும் புளிக்கரைசல் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து கொதிக்க விடவும். கொஞ்சம் கெட்டியானதும் இதை சட்னியாகப் பயன்படுத்தலாம்.
- சித்ரான்ன பஜ்ஜி என்று அழைக்கப்படும் இது இட்லி, தோசைக்கு பக்காவான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
