Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
1 கப் மைதா இருந்தா இந்த சூப்பரான மங்களூர் பன்-யை ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும்
Mangalore Bun With Coconut Chutney Recipe in Tamil: மாலை நேரம் வந்தாலே ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டுமென்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். மாலை நேர நொறுக்குத்தீனி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது பஜ்ஜி, வடை போன்றவைதான். ஆனால் இவற்றை அடிக்கடி சாப்பிட்டு போரடித்து விட்டதா? புதிதாக ஏதாவது சாப்பிட ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால் இந்த மங்களூர் பன்-யை முயற்சி செய்து பாருங்கள்.

இந்த மங்களூர் பன்-யை சிற்றுண்டியாக மட்டுமின்றி காலை டிபனாகவும் சாப்பிடலாம். இந்த பன் தென்னிந்தியா முழுதுவம் மிகவும் பிரபலமானது. இந்த மிருதுவான மற்றும் லேசான இனிப்பு கொண்ட பன் கர்நாடகம் முழுவதும் அனைத்து கடைகளிலும் காலையும், மாலையும் கிடைக்கும். கர்நாடாவின் சின்ன கடைகள் முதல் மிகப்பெரிய கடைகள் வரை அனைத்துக் கடைகளிலும் இவை கிடைக்கும். காரமான தேங்காய் சட்னி இதற்கு சரியான காம்பினேஷனாக இருக்கும்.
உங்களுக்கு சுவையான மங்களூர் பன்னையும், தேங்காய் சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மங்களூர் பன்-ன் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பன் செய்ய:
- மைதா மாவு - 1 கப்
- பழுத்த வாழைப்பழம் - 1
- சர்க்கரை - 1 ஸ்பூன்
- தயிர் - 1.5 ஸ்பூன்
- உப்பு - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- சமையல் சோடா - 1/4 ஸ்பூன்
- எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு
தேங்காய் சட்னி செய்ய:
- துருவிய தேங்காய் - 1/2 கப்
- பச்சை மிளகாய் - 5
- புளி - சிறிதளவு
- கறிவேப்பிலை - 1 கொத்து
- நறுக்கிய கொத்தமல்லி - 1 ஸ்பூன்
- பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
- பூண்டு பல் - 2
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- ஒரு அகலமான பாத்திரத்தில், வாழைப்பழங்களை போட்டு நன்கு மசித்துக் கொள்ளவும்.
- பின்னர் அதில் தயிர், சர்க்கரை, உப்பு மற்றும் மைதா மாவு ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- தண்ணீர் சேர்க்காமல் நன்றாக மாவு பிசைந்து கொள்ளவும்.
- இதை ஒரு மூடி போட்டு மூடி வைத்து 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
- மாவை நன்றாகப் பிசைந்து, தடிமனான, வட்ட வடிவ பூரிகளாகத் தட்டி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும், எண்ணெய் சூடானதும் தட்டி வைத்த பூரிகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- இருபுறமும் பொன்னிறமாகும் வரை நன்றாக பொரிக்கவும்.
- பின்னர் ஒரு டிஸ்யூ பேப்பரில் வைத்து எண்ணெயை வடிகட்டிக் கொள்ளவும்.
- தேங்காய் சட்னி அரைக்க அனைத்து பொருட்களையும் மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.
- இந்த மங்களூர் பன்-க்கு சட்னி கெட்டியாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். அதேபோல சட்னியை தாளிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
- அவ்வளவுதான் சுவையான மங்களூர் பன் ரெடி.



Click it and Unblock the Notifications
