Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
மணமணக்கும்.. மணத்தக்காளி வத்தக்குழம்பு.. சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Manathakkali Vathal Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் மணத்தக்காளி வத்தல் உள்ளதா? அந்த மணத்தக்காளி வத்தலை கொண்டு நாவூறும் சுவையில் ஒரு அட்டகாசமான குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டைலில் ட்ரை செய்யுங்கள்.
இந்த மாதிரி குழம்பு செய்யும் போது, ஒரு தட்டு சோறு டக்குன்னு காலியாயிடும். அதோடு வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாவும் சாப்பிடுவார்கள். பேச்சுலர்கள் கூட இந்த குழம்பை செய்து சாப்பிடலாம். முக்கியமாக இந்த குழம்பை ஒருமுறை செய்தால், 3 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.

உங்களுக்கு மணத்தக்காளி வத்தல் குழம்பை எப்படி செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மணத்தக்காளி வத்தல் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு...
* வரமிளகாய் - 5
* மல்லி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* துவரம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
* எள்ளு - 3//4 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
* சுக்குத் தூள் - 1 1/2 டீஸ்பூன்
குழம்பிற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 15 பல் (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 30
* தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மணத்தக்காளி வத்தல் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* புளி தண்ணீர் - 1/4 கப்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/2 லிட்டர்
* நாட்டுச்சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/4 கப்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், மல்லி,
உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, வெந்தயம், கடுகு, மிளகு,
கறிவேப்பிலை, சீரகம், எள்ளு விதைகளை சேர்த்து நல்ல மணம் வரும் வரை
வறுக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள், சுக்குத் தூள் சேர்த்து வறுத்து
இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து பொடி
செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள் மற்றும் சின்ன
வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மணத்தக்காளி வத்தலை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், புளி தண்ணீர், காஷ்மீரி மிளகாய் தூள்
சேர்த்து கிளறி விட்டு, பின் 1/2 லிட்டர் நீரை ஊற்றி கொதிக்க வைக்க
வேண்டும்.
* குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காயை
சேர்த்து கிளறி, மூடி வைத்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக நாட்டுச்சர்க்கரையை சேர்த்து கிளறி, ஒரு கொதி விட்டு
இறக்கினால், சுவையான மணத்தக்காளி வத்தல் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications











