Latest Updates
-
உங்களை கொசுக்கள் அதிகம் கடிப்பதற்கு காரணம் இதுதானாம் - ஆய்வு சொல்லும் அதிர்ச்சி செய்தி - ஷாக் ஆகாதீங்க -
ஜூலை இறுதியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வாழைப்பூ வாங்குனா இந்த மாதிரி திருநெல்வேலி ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
கோவைக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 04-ல் நிகழும் சுக்கிரன்-கேது சேர்க்கை இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
1 மாதம் வெண்டைக்காய் ஊற வைத்த நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்! -
சாணக்கிய நீதி படி இந்த 4 வீடுகளில் வசிப்பவர்கள் கோடிகளில் சம்பாதித்தாலும் ஏழையாகத்தான் இருப்பார்களாம் -
சனி நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. -
தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க மனஅழுத்தத்தால் கஷ்டப்பட போறாங்களாம்
கேரளா மாம்பழ புளிசேரி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, சாதத்தோட சாப்பிட ஜம்முனு இருக்கும்
Mambazha Pulissery Recipe in Tamil: கோடைகாலம் வந்தாலே அது மாங்காயும், மாம்பழமும் சாப்பிடுவதற்கான காலம்தான். பழங்களின் அரசன் என்று அழைக்கப்படும் மாம்பழம் கோடைகாலத்தில் மட்டும்தான் கிடைக்கும். கிடைக்கும் போதே மாங்காயை சுவைத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக மாங்காயை மிளகாய், உப்பு வைத்து சாப்பிட அனைவருக்கும் பிடிக்கும், சிலர் மாங்காயை சாம்பார் வைத்தோ அல்லது பச்சடி செய்தோ சாப்பிடுவார்கள். அதேபோல்தான் மாம்பழத்தை பெரும்பாலான மக்கள் அப்படியே சாப்பிடுவார்கள்.

ஆனால் மாம்பழத்தை வைத்தும் சில சூப்பரான உணவுகளை தயாரிக்கலாம். அப்படி ஒரு சுவையான உணவுதான் மாம்பழ புளிசேரி. இந்த மாம்பழ புளிசேரி கேரளாவில் மிகவும் பிரபலமானதாகும். இது ஒருவகை குழம்பாகும். இந்த குழம்பை சாதத்தில் ஊற்றி கேரளா மக்கள் சாப்பிடுவார்கள். புளிப்பு, காரம் மற்றும் இனிப்பு சுவை நிறைந்த இது கோடைகாலத்தில் சாப்பிட ஒரு அட்டகாசமான உணவாக இருக்கும். நீங்கள் இந்த மாம்பழ புளிசேரியை சாப்பிட விரும்பினால் அதற்கு கேரளவுக்குத்தான் செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. உங்கள் வீட்டிலேயே எளிதாக செய்து சாப்பிடலாம்.
உங்களுக்கு கேரளா ஸ்டைல் மாம்பழ புளிசேரியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் மாம்பழ புளிசேரி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 4 பழுத்த சிறிய மாம்பழம்
- 1 கப் தயிர்
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- ¼ ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 டேபிள் ஸ்பூன் வெல்லம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- தேவையான அளவு உப்பு
அரைக்க:
- 1 கப் தேங்காய்
- 2 பச்சை மிளகாய்
- ½ ஸ்பூன் சீரகம்
தாளிக்க:
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 வர மிளகாய்
- ½ ஸ்பூன் கடுகு
- கால் ஸ்பூன் வெந்தயம்
- ¼ ஸ்பூன் மிளகாய்த்தூள்
- சிறிதளவு கறிவேப்பிலை
செய்முறை:
- முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மற்றும் சிறிது தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். இதை மென்மையான விழுதாக அரைத்து, தனியாக எடுத்து வைக்கவும்.
- பின்னர் மாம்பழங்களை எடுத்து மெதுவாகத் தோலுரித்துக் கொள்ளவும். கீழிருந்து மேலாக பழத்தை உரித்தால் எளிதாக தோல் வரும். முடிந்தவரை பழத்தின் வடிவம் சிதையாமல் தோலை உரிக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் தோல் நீக்கிய மாம்பழங்கள், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், வெல்லம் மற்றும் ஒன்றரை கப் தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.
- இதை 5 நிமிடங்கள் அல்லது மாம்பழம் மென்மையாகும் வரை கொதிக்க வைக்கவும்.
- மாம்பழங்கள் கருகாமல் இருக்க, அவற்றை அவ்வப்போது மெதுவாகத் திருப்பிவிடுவதை உறுதி செய்யவும்.
- பின்னர் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.
- பின்னர் குழம்பு கெட்டியாகி ஒரே சீராக வரும் வரை கொதிக்க விடவும்.
- தயிரை நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பை சிம்மில் வைத்து, அடித்து வைத்த தயிரைச் சேர்க்கவும்.
- தயிர் சேர்த்தப் பிறகு கொதிக்கும் வரை மட்டும் சூடாக்கவும். ஆனால், கொதித்து விடாமல் சரியான நேரத்தில் அடுப்பை அணைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்ததும் அதில் வர மிளகாய், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- அடுப்பை அணைத்துவிட்டு, கடைசியாக மிளகாய்த் தூளைச் சேர்த்து ஒருமுறை வேகமாக கிளறவும்.
- இதை மாம்பழ புளிசேரியில் சேர்த்து நன்றாக கிளறினால் சுவையான கேரளா மாம்பழ புளிசேரி தயார்!



Click it and Unblock the Notifications