1 கப் மைதாவும், 1 முட்டையும் இருந்தா 10 நிமிஷத்துல இந்த டிபனை செய்யுங்க... எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...

Posted By:

Maida Sweet Paniyaram Recipe in Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான அதேசமயம் டிபன் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் மைதாவும் ஒரு முட்டையும் உள்ளதா? ஆம் எனில் சுவையான மற்றும் வித்தியாசமான அதேசமயம் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு பணியாரத்தை செய்யுங்கள். இதை அவர்களுக்கு மதிய உணவாகவும் கொடுக்கலாம்.

மைதா, வாழைப்பழம் மற்றும் முட்டை சேர்த்து செய்யப்படும் இந்த பணியாரம் செய்வதற்கு மிகவும் எளிதாக இருப்பதோடு மிகவும் சுவையானதாகவும் இருக்கும். ஒரு வித்தியாசமான சுவையுடைய பணியாரத்தை சில நிமிடங்களில் செய்து விடலாம்.

Maida Sweet Paniyaram Recipe How to Make Maida Sweet Paniyaram

பொதுவாக மைதாவை வைத்து பரோட்டா அல்லது நான் போன்றவைதான் செய்ய முடியும் என்று நாம் நினைக்கிறோம், ஆனால் மைதாவை வைத்து பல அட்டகாசமான உணவுகளை செய்யலாம். அப்படி ஒரு சூப்பரான உணவுதான் இந்த சுவையான மைதா இனிப்பு பணியாரம்.

உங்களுக்கு சுவையான இனிப்பு மைதா பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இனிப்பு மைதா பணியாரத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- மைதா மாவு - 1/4 கிலோ
- முட்டை - 1
- வாழைப்பழம் - 1
- தேங்காய் துருவல் - 1/4 கப்
- சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை - முக்கால் கப்
- தண்ணீர் - 2 கப்
- ஏலக்காய் - 3 (பொடியாக்கவும்)
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

- மைதா மாவை முதலில் நன்றாக சலித்து சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

- பின்னர் மாவில் வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

- பின்னர் முட்டையை உடைத்து மாவில் ஊற்றவும்.

- பின்னர் துருவிய தேங்காய், பொடித்த ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு, சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.

- வாணலியில் எண்ணெய் ஊற்றி 4-5 நிமிடம் போல் காய வைக்கவும்

- ஒரு கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.

- ஒரு நிமிடம் கழித்து திருப்பிப் போட்டு மேலும் ஒரு நிமிடம் போல வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.

- இதை பணியார சட்டியில் ஊற்றி பணியாரம் போலவும் சாப்பிடலாம்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion