Latest Updates
-
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க..
இட்லி, தோசைக்கு ஏற்ற மதுரை தக்காளி தண்ணி சட்னி - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா?
Madurai Thakkali Thanni Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு தக்காளி சட்னி என்றால் ரொம்ப பிடிக்குமா?
அப்படியானால் இன்று அவர்களுக்கு மதுரை தக்காளி தண்ணி சட்னியை செய்து கொடுங்கள். இந்த சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும். முக்கியமாக வீட்டிற்கு நிறைய விருந்தினர்கள் வந்திருக்கும் போது இந்த சட்னியை செய்தால், நல்ல பாராட்டைப் பெறலாம்.

உங்களுக்கு மதுரை தக்காளி தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை தக்காளி தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 2 சிட்டிகை
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 1 1/2 இன்ச்
* புளி - சிறிய துண்டு
* சின்ன வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 3 (நறுக்கியது)
* காஷ்மீரி வரமிளகாய் - 4
* வரமிளகாய் - 4
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* பொட்டுக்கடலை - 25 கிராம்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு பற்கள் மற்றும் இஞ்சியை தட்டி சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புளி, சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி
நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் காஷ்மீரி வரமிளகாய் மற்றும் சாதாரண வரமிளகாய் சேர்த்து
நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வரமிளகாய் மற்றும் 1/2 மூடி துருவிய
தேங்காயை சேர்த்து முதலில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கிய மற்ற பொருட்களை சேர்த்து நன்கு அரைக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பொட்டுக்கடலையை சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, தண்ணி
சட்னி என்பதால், சற்று அதிகமாகவே தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான மதுரை தக்காளி தண்ணி
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications