Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
சன்டே ஸ்பெஷல்: மணமணக்கும்... மதுரை ஸ்டைல் சிக்கன் சால்னா
Madurai Style Chicken Salna Recipe In Tamil: இந்த வாரம் உங்கள் வீட்டில் சிக்கன் செய்யப் போகிறீர்களா? சிக்கனைக் கொண்டு ஒரு வித்தியாசமான சுவையைக் கொண்ட சமையலை செய்ய விரும்புகிறீர்களா? உங்களுக்கு மதுரை ஸ்டைல் சமையல் பிடிக்குமா?
அப்படியானால் இந்த வாரம் மதுரை ஸ்டைல் சிக்கன் சால்னாவை முயற்சி செய்யுங்கள். இந்த சிக்கன் சால்னா இட்லி, தோசை, பரோட்டா, சப்பாத்தி போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு மதுரை ஸ்டைல் சிக்கன் சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை ஸ்டைல் சிக்கன் சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்நது கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு..
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1/2 இன்ச்
* ஏலக்காய் - 3
* இஞ்சி - 1/2 இன்ச்
* பூண்டு - 8 பல்
பிற பொருட்கள்...
* சிக்கன் - 1/2 கிலோ
* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி
சூடானதும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள வேர்க்கடலை, சோம்பு,
சீரகம், மிளகு, ஏலக்காய், பட்டை, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு
வதக்கி, அத்துடன் தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர
வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, சிறிது உப்பு தூவி
நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி,
கழுவி வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி, அரைத்து
வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கினால், சுவையான
மதுரை ஸ்டைல் சிக்கன் சால்னா தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications











