Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
1 கப் மைதாவும், 1 கப் ரவையும் இருந்தா இந்த மதுரை ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பத்தை செஞ்சு பாருங்க...அட்டகாசமா இருக்கும்!
Madurai Special Sojji Appam Recipe in Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வீட்டிற்கு வரும் பிள்ளைகளின் பசியை போக்கும் வகையில் ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டுமா? அதுவும் சீக்கிரம் செய்யக்கூடிய வகையில் ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த மதுரை ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பத்தை முயற்சி செய்து பாருங்கள்.
பொதுவாக மதுரை என்றால் அசைவ உணவுகளுக்குத்தான் பிரபலம் என்று கூறுவார்கள், ஆனால் உண்மையில் மதுரை பல தனித்துவமான உணவுகளுக்கு புகழ் பெற்றது. அதிலொன்றுதான் இந்த சொஜ்ஜி அப்பம். உங்கள் வீட்டில் ஒரு கப் மைதாவும், ஒரு கப் ரவையும் இருந்தால் போதும் சூப்பரான இந்த மதுரை ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பத்தை செய்து விடலாம்.

இந்த அப்பம் குழந்தைகளின் பசியை விரைவில் போக்கும். மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருப்பதால், மாலையில் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்டால் இதை சூடாக செய்து கொடுக்கலாம்.
உங்களுக்கு மதுரை ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சொஜ்ஜி அப்பத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
மேல் மாவு செய்ய:
- மைதா மாவு - ஒரு கப்
- உப்பு - ஒரு சிட்டிகை
- நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
ஸ்டஃபிங் செய்ய:
- ரவை - ஒரு கப்
- சர்க்கரை - ஒரு கப்
- தண்ணீர் - 2 கப்
- நெய் - 2 டேபிள்ஸ்பூன்
- ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
- எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
- முதல் பாத்திரத்தில் மைதா மாவுடன் உப்பு, அரை டீஸ்பூன் நெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசையவும்.
- இந்த மாவின் மீது அரை டேபிள்ஸ்பூன் நெய்விட்டு, ஒரு மணி நேரம் அப்படியே மூடி ஊறவிடவும்.
- வாணலியில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு ரவையைச் சேர்த்து, நிறம் மாறாமல் வறுத்தெடுக்கவும். பின்னர் அதே வாணலியில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும்.
- தண்ணீர் கொதித்ததும் அதனுடன் ரவை சேர்த்துக் கிளறி வேகவிடவும். பிறகு சர்க்கரை சேர்த்துக் கலவை கொஞ்சம் கெட்டியாகும் வரை கிளறி இறக்கி வைக்கவும்.
- பின்னர் அதன்மேல் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து ஆறவிடவும். ஆறிய ரவைக் கலவையைச் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- பிசைந்த மைதா மாவைச் சிறிய உருண்டைகளாக்கி சப்பாத்தி போல தேய்க்கவும். அதன் நடுவே ரவை பூரண உருண்டைகளை வைத்து மூடி, கையால் லேசாகத் தட்டவும்.
- பிறகு சற்றுக் கனமான பூரிகளாக உருட்டவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி, தேய்த்து வைத்த சொஜ்ஜி அப்பங்களைப் போட்டு இரண்டு புறமும் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
- இதை ஆறவைத்து சாப்பிட்டால் அட்டகாசமான மதுரை ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெடி.



Click it and Unblock the Notifications











