Latest Updates
-
அக்டோபர் 17-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெசிபி - உருளைக்கிழங்கை இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பணத்தாசை கொண்டவர்களாம் - இவங்களுக்கு பணம்தான் முக்கியமாம் -
உங்கள் கையில் விதி ரேகை இல்லாமல் இருப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? உண்மை என்னனு தெரிஞ்சிக்கோங்க -
வாஸ்துப்படி இந்த 5 சிலைகளை வீட்டுல வாங்கி வையுங்க.. வீட்டில் பணப்பிரச்சனையே வராது.. -
தலையணைக்கு அடியில் இந்த 5 பொருட்களில் ஒன்றை வைத்து தூங்குவது உங்களுக்கு சகல நன்மைகளையும் கொடுக்குமாம் -
1 கப் அவலும், 1 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
2 முட்டை இருந்தா இந்த மாதிரி அவிச்ச முட்டை ஆம்லெட் ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா வேற லெவலில் இருக்கும் -
உங்க தலைமுடி வறண்டு தேங்காய் நார் போல் இருக்கா? அப்ப வீட்டிலேயே இந்த கெரட்டின் ஹேர் மாஸ்க்கை போடுங்க..
மதுரை மட்டன் பொடிமாஸ் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க...
Madurai Mutton Podimas Recipe In Tamil: இந்த வார விடுமுறை நாளில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஸ்பெஷலாக ஏதாவது சமைத்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் மட்டனைக் கொண்டு ஒரு புதுமையான சமையலை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் மதுரை ஸ்பெஷல் மட்டன் பொடிமாஸ் செய்து கொடுங்கள்.

இந்த மட்டன் பொடிமாஸ் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த மட்டன் பொடிமாஸை செய்தால் வெறுமனே கூட சாப்பிடலாம். முக்கியமாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு
இந்த மதுரை மட்டன் பொடிமாஸ் ரெசிபி குறித்து ஈரோடு அம்மாச்சி சமையல் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த மதுரை மட்டன் பொடிமாஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை மட்டன் பொடிமாஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* எலும்பில்லாத மட்டன் - 400 கிராம்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* நெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல் (தட்டியது)
* இஞ்சி - 1/4 இன்ச் (துருவியது)
* தண்ணீர் - சிறிது
பொடிமாஸ் செய்வதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 3/4 டீஸ்பூன்
* சீரகம் - 2 சிட்டிகை
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 2 சிட்டிகை
* முந்திரி - 10 (உடைத்தது)
* இஞ்சி - 1/2 இன்ச் (துருவியது)
* பூண்டு - 6 பல் (தட்டியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 2 கைப்பிடி (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சிறிது
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* வேக வைத்த மட்டன்
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை கழுவி மிக்சர் ஜாரில் போட்டு ஒருமுறை லேசாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரில் அரைத்த மட்டனை சேர்த்து, அத்துடன் மஞ்சள்
தூள், சிறிது உப்பு சேர்த்து கிளறி, கிறிது நீரை ஊற்றி குக்கரை மூடி
2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு, சோம்பு,
முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் துருவிய இஞ்சியை
சேர்த்து நன்கு கிளறி, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை தூவி நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து,
அத்துடன் மஞ்சள் தூள், சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்த மட்டனை சேர்த்து நன்கு வதக்கி, மூடி
வைத்து 1 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் கிளறி,
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான மதுரை
மட்டன் பொடிமாஸ் தயார்.



Click it and Unblock the Notifications
