Latest Updates
-
கேது-சந்திர சேர்க்கை: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
உங்க முகத்தில் முகப்பரு தழும்புகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
இந்த 3 கேள்விக்கு பதில் சொல்லுங்க.. உங்களோட உண்மையான குணத்தை சொல்றோம்.. -
கேது செவ்வாய் சேர்க்கை: டிசம்பர் முதல் இந்த 3 ராசிக்கு பண பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
நாவூறும்.. செம்மீன் சட்டிச்சோறு - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
25 வயதிலேயே சர்க்கரை நோயா? இளம் வயதினருக்கு ஏன் இவ்வளவு சீக்கிரமாக வருகிறது? டாக்டர் விளக்கம்! -
2027-ல் 3 முறை ராசியை மாற்றும் குரு பகவான்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மலாய் சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 29, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கசப்பான அனுபவங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவானின் வக்ர பெயர்ச்சியால் கோடி நன்மைகளை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
லன்ச் பாக்ஸ்-க்கு இந்த கோவைக்காய் சாதம் செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Lunch Box Special Kovakkai Sadam Recipe In Tamil: காலையில் பசங்களுக்கு டிபன் பாக்ஸிற்கு என்ன சமைத்து கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் பெரும்பாலும் வெரைட்டி ரைஸ் தான் செய்து கொடுப்பீர்களா? அதுவும் ஒரே மாதிரியான வெரைட்டி ரைஸ் தான் செய்து கொடுப்பீர்களா? இதனால் வரவர உங்கள் பிள்ளைகள் சரியாக சாப்பிடுவதில்லையா? உங்கள் பிள்ளைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு, அதே வேளையில் வித்தியாசமான சுவையில் ரைஸ் செய்ய நினைத்தால், கோவைக்காய் சாதம் செய்து கொடுங்கள்.

உங்களுக்கு இந்த கோவைக்காய் சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவைக்காய் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா அரைப்பதற்கு...
* பெரிய வெங்காயம் - 2
* உப்பு - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* புளி - 2-3 துண்டு
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
* கோவைக்காய் - 1/2 கிலோ (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* அரைத்த விழுது
* வதக்கிய கோவைக்காய்
* உப்பு - சுவைக்கேற்ப
* பாசுமதி அரிசி - 1 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வெங்காயம், உப்பு, மல்லி, சீரகம்,
பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், புளி மற்றும் சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கோவைக்காயை சேர்த்து நன்கு வதக்கி, ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், வரமிளகாய்,
பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த விழுதை சேர்த்து மிதமான தீயில் வைத்து,
பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* மசாலாவானது மிகவும் ட்ரையாக இருந்தால், சிறிது நீரை சேர்த்து
கலந்து, வதக்கி வைத்துள்ள கோவைக்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி 2-3 நிமிடம் நன்கு கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்த பாசுமதி அரிசியை சேர்த்து 5 நிமிடம் நன்கு
கிளறி விட்டு, நெய் ஊற்றி பிரட்டி இறக்கினால், சுவையான கோவைக்காய்
சாதம் தயார்.



Click it and Unblock the Notifications
