Latest Updates
-
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும்
Lemon Aval Upma Recipe in Tamil: உங்கள் வீட்டில் தினமும் காலையில் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? அடிக்கடி இட்லி மாவு அரைக்க மிகவும் சிரமமாக உள்ளதா? ஏதாவது புதிதாக சமைத்து சாப்பிட ஆசைப்படுகிறீர்களா? உங்கள் வீட்டில் அவல் உள்ளதா? அப்படியானால் அந்த அவலுடன் எலுமிச்சையை சேர்த்து, சூப்பரான லெமன் அவல் உப்புமா செய்து சாப்பிடுங்கள்.

இந்த உப்புமா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். அதுவும் வேலைக்கு செல்வோர், பேச்சுலர்கள் போன்றோருக்கு மிகவும் ஏற்ற ரெசிபியாகும். உப்புமா பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட, இந்த லெமன் அவல் உப்புமாவை விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த உப்புமா சுவையானது என்பதை விட ஆரோக்கியமானதும் கூட.
உங்களுக்கு சுவையான் லெமன் அவல் உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே லெமன் அவல் உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் கெட்டி அவல்
- 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
- தேவையான அளவு உப்பு
- கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
- கால் ஸ்பூன் பெருங்காயம்
தாளிக்க:
- 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் கடலைப் பருப்பு
- 4 பச்சை மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- கால் ஸ்பூன் பெருங்காயத் தூள்
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
செய்முறை:
- அவலைக் கழுவி, வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்கவும். அவல் மூழ்கும் அளவிற்கு மட்டும் தண்ணீர் இருந்தால் போதுமானது. அவல் விரைவில் ஊறி விடும் என்பதால் அதிகளவு தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
- இந்தத் தண்ணீரிலேயே உப்பு, எலுமிச்சைச் சாறு, சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். அப்போதுதான் அவல் அவற்றை முழுமையாக உறிஞ்சும்.
- 10-15 நிமிடங்களுக்குப் பிறகு, அவல் அந்தத் தண்ணீர் முழுவதையும் உறிஞ்சிவிடும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்ததும் அதில் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- பருப்பு வகைகள் பொன்னிறமாக மாறியதும் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயத்தை சேர்த்து கிளறவும்.
- பச்சை மிளகாய் வதங்கியதும் ஊற வைத்த அவலை சேர்த்து கிளறவும்.
- தீயைக் குறைத்து வைத்து, மூடி போட்டு 10 நிமிடங்கள் வரை சமைக்கவும்.
- இறுதியாக மூடியை திறந்து கொத்தமல்லி தூவி கிளறினால் சுவையான லெமன் அவல் உப்புமா ரெடி!
- இதை காரமான தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
