Latest Updates
-
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
லஹோரி ஆலு
உங்கள் வீட்டில் பேபி உருளைக்கிழங்கு உள்ளதா? இதுவரை பேபி உருளைக்கிழங்கைக் கொண்டு வறுவல் மட்டும் தான் செய்துள்ளீர்களா? அப்படியானால் இன்று லஹோரி ஆலு செய்து சுவையுங்கள்.
உங்கள் வீட்டில் பேபி உருளைக்கிழங்கு உள்ளதா? இதுவரை பேபி உருளைக்கிழங்கைக் கொண்டு வறுவல் மட்டும் தான் செய்துள்ளீர்களா? அப்படியானால் இன்று லஹோரி ஆலு செய்து சுவையுங்கள். இது ஒரு சுவையான உருளைக்கிழங்கு கிரேவி. இந்த லஹோரி ஆலு சப்பாத்தி, நாண், சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு இது உங்கள் வீட்டில் உள்ளோருக்கு விருந்தளிக்கும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு லஹோரி ஆலு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே லஹோரி ஆலு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பேபி உருளைக்கிழங்கு - 10
* வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது)
* அரைத்த தக்காளி - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* கசகசா - 2 டீஸ்பூன்
* மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் - 2
* மிளகு - 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1/2 இன்ச்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
செய்முறை:
* முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் பேபி உருளைக்கிழங்கைப் போட்டு நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின் வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை உரித்து விட்டு இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு 2 நிமிடம் வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே எண்ணெயில் பிரியாணி இலை, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து 5-7 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அரைத்த தக்காளியை சேர்த்து நன்கு கிளறி, சில நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
* பின்பு கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். கிரேவியில் இருந்து பச்சை வாசனை போனதும், வறுத்த பேபி உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைத்து, மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான லஹோரி ஆலு தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
