Latest Updates
-
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
வெண்டைக்காயை தாபா ஸ்டைலில் இந்த மாதிரி செஞ்சு பாருங்க... சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்...!
Dhaba Style Ladies Finger Fry Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் அடிக்கடி சமைக்கப்படும் காய்கறிகளில் ஒன்று வெண்டைக்காய். அதற்கு காரணம் வெண்டைக்காயின் சுவையும், அதிலுள்ள மருத்துவ குணங்களும்தான். பொதுவாக வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை நன்கு வளரும் என்று கூறுவார்கள். வெண்டைக்காயை அதிகம் சமைக்க இதுவும் ஒரு முக்கியக் காரணம்.
வெண்டைக்காயை பொதுவாக சாம்பார் வைத்தோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிடுவோம், ஆனால் தாபாக்களில் வெண்டைக்காயை காரமாக ஒரு தனித்துவமான பொரியல் செய்வார்கள். இதை சாதத்துடனோ அல்லது சப்பாத்தி, ரொட்டியுடனோ வைத்து சாப்பிட சூப்பராக இருக்கும். இந்த பதிவில் சூப்பரான தாபா ஸ்டைல் வெண்டைக்காய் ப்ரை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 250 கிராம் வெண்டைக்காய்
- 5 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் சீரகம்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1 கப் நறுக்கிய வெங்காயம்
- 1 கப் அரைத்த தக்காளி விழுது
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் சீரகத்தூள்
- 1 ஸ்பூன் மல்லித்தூள்
- 1/2 ஸ்பூன் கரம் மசாலா
- 2 சிட்டிகை மஞ்சள்தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி, அதில் வெண்டைக்காய் துண்டுகளைச் சேர்த்து, அவை கருமையாக மாறும் வரை வதக்கவும். பின்னர் அதை ஆறும் படி ஓரமாக வைக்கவும்.
- அதே பாத்திரத்தில், 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் அதில் கடுகு போட்டு பொரிய விடவும்.
- பின்னர் அதில் சீரகத்தை போட்டு தாளிக்கவும்.
-பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அது பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். வெங்காயம் நிறம் மாறும் போது, கறிவேப்பிலை சேர்க்கவும்.
- வெங்காயம் நிறம் மாறியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும், பின்னர் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், சீரகத்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- பின்னர் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.
- எண்ணெய் தனியாக பிரிந்து வந்த பின், வதக்கி வைத்த வெண்டைக்காயைச் சேர்த்து 3-4 நிமிடங்கள் சமைக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
- அட்டகாசமான வெண்டைக்காய் பிரை ரெடி. இதை சாப்பாடு அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
