Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
உடலுக்கு வலு சேர்க்கும் குதிரைவாலி கிச்சடி - காலையில் எப்படி சிம்பிளா செய்றது-ன்னு பாருங்க...
Kuthiraivali Kichadi Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு சத்தான காலை உணவை செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் சிறுதானியங்களை வாங்கி கஞ்சி செய்து குடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படியென்றால், வீட்டில் குதிரைவாலி இருந்தால், அதைக் கொண்டு காய்கறிகளை சேர்த்து கிச்சடி செய்யுங்கள். இந்த குதிரைவாலி கிச்சடி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு குதிரைவாலி கிச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குதிரைவாலி கிச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* குதிரைவாலி - 150 கிராம் அல்லது 1 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸபூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* முந்திரி - 10
* பச்சை மிளகாய் - 4 (பெரிய துண்டுகளாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கியது)
* பட்டாணி - 50 கிராம்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 3 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் குதிரைவாலியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை
ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை,
இஞ்சி, முந்திரி ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்துள்ள
வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கேரட், பீன்ஸ், பட்டாணியை சேர்த்து, மஞ்சள் தூள்
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 3-4 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் 3 1/2 கப் நீரை ஊற்றி, நீர் நன்கு கொதிக்க
ஆரம்பித்ததும், ஊற வைத்துள்ள குதிரைவாலியில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு
சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி, குக்கரை மூடி, மிதமான தீயில்
வைத்து 3 விசில் விட்டு இறக்கினால், சுவையான குதிரைவாலி கிச்சடி
தயார்.



Click it and Unblock the Notifications






