Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
தமிழர்களே அறியாத தமிழ்நாடு பாரம்பரிய இனிப்புகள் ரெசிபி... கிருஷ்ண ஜெயந்திக்கு இதை செஞ்சு அசத்துங்க...!
Krishna Jayanti Special Tamilnadu Traditional Sweets Recipes in Tamil: இந்துக்களின் மிகவும் முக்கிய பண்டிகையான கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படும் கிருஷ்ண ஜெயந்தி இன்று இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. திருமாலின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பான நாளில் குழந்தை கிருஷ்ணரை வழிபடுவது ஒருவருக்கு சகல நன்மைகளையும் அளிக்கும் என்பது பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் நம்பிக்கை.
இந்த நாளில் வீட்டிற்க்குள் கிருஷ்ணரின் பாதம் வரைந்து, வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணரின் வேஷம் போட்டு கிருஷ்ணருக்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபடுவது கிட்டதட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் நடைமுறையாகும். கிருஷ்ண ஜெயந்தி பூஜையில் மிகவும் முக்கியமானது உணவுகளும், பலகாரங்களும்தான்.

கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த உணவுகள் என்பது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். வழக்கமாக லட்டு, ஜிலேபி, சீடை போன்ற இனிப்புகளை வைத்து வழிபடுவதற்குப் பதிலாக இந்த வருடம் தமிழர்களின் சில பாரம்பரிய இனிப்புகளை செய்து கிருஷ்ணரை வழிபடுங்கள். இந்த பதிவில் தமிழர்கள் பலரும் அறியாத சில தனித்துவமான இனிப்பு வகைகளை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
மனோகரம்
இந்த தமிழர் பாரம்பரிய இனிப்பை பற்றி பலரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. மனோகரம் என்பது தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய இனிப்பு. குறிப்பாக திருநெல்வேலி, திருச்செந்தூர், மதுரை, மற்றும் தென்காசி பகுதிகளில் பிரபலமானது. இந்த மனோகரத்தை எப்படி செய்யலாம் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்:
- பச்சரிசி: 1 கப்
- உளுத்தம் பருப்பு: ¼ கப்
- வெல்லம்: 1 கப்
- தண்ணீர்: ¼ கப்
- வெண்ணெய்: 1 தேக்கரண்டி
- ஏலக்காய்: 2 (தூளாக்கியது)
- எண்ணெய்: பொரிப்பதற்குத் தேவையான அளவு
செய்முறை:
- மனோகரம் செய்வதற்கு முதல்கட்டமாக, பச்சரிசி மற்றும் உளுத்தம்பருப்பை தனித்தனியாக ஊறவைத்து நைசாக அரைக்க வேண்டும். பின்னர், அரைத்த மாவில் வெண்ணெய் மற்றும் உப்புடன், தேவையான அளவு தண்ணீரை மட்டும் சேர்த்து கெட்டியான மாவாக பிசைய வேண்டும்.
- பின்னர் இந்த மாவை தேன்குழல் அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் முறுக்காக பிழிந்து பொன்னிறமாக பொரிக்க வேண்டும். முறுக்குகள் ஆறியதும், அவற்றை சிறு துண்டுகளாக உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாகு தயாரிக்க வேண்டும். பாகு கெட்டிப்பதம் அடைந்ததும், அதில் முறுக்கு துண்டுகளைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். கலவை இன்னும் சூடாக இருக்கும்போதே, கையில் நெய் தடவிக்கொண்டு உருண்டையாகவோ அல்லது பிடித்த வடிவத்திலோ செய்து வைக்கலாம்.
- மனோகரம் சரியாக உறைவதற்கு பாகு சரியான கெட்டிப்பதத்தில் இருக்க வேண்டும் என்பது முக்கியம். கூடுதல் சுவைக்கு, வெல்லப்பாகில் சுக்குப்பொடி அல்லது தேங்காய் கீற்றுகளையும் சேர்க்கலாம்.
முக்குளியம்
இதுவும் தமிழ்நாட்டின் தெற்கு பகுதியை சேர்ந்த ஒரு ஆரோக்கியமான மற்றும் பாரம்பரிய இனிப்பாகும்.
தேவையான பொருட்கள்:
- கம்பு மாவு - 1 கப்
- அரிசி மாவு - ¼ கப்
- வெல்லம் - ¾ முதல் 1 கப் வரை (சிறு துண்டுகளாக)
- தண்ணீர் - ½ கப்
- சுக்கு பொடி - ¼ டீஸ்பூன்
- ஏலக்காய் பொடி - ½ டீஸ்பூன்
- உப்பு - ஒரு சிட்டிகை
- தேங்காய் துருவல் - ¼ கப்
- நெய் - 2 மேசை கரண்டி
- வெண்ணெய் - 1 மேசை கரண்டி
- முந்திரி பருப்பு - 10
- தேங்காய் பால் - 1 கப்
செய்முறை:
- கம்பு பொடி, அரிசி மாவு, வெல்லப்பாகு, சுக்கு பொடி, ஏலக்காய் பொடி, உப்பு, தேங்காய் துருவல், நெய், வெண்ணெய் மற்றும் வறுத்த முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து ஓரளவு தண்ணீரில் பிசுபிசுப்பான மாவாக கலக்கவும்.
- பனியார சட்டியை காயவைத்து ஒவ்வொரு குழியிலும் நெய் விட்டு மாவை ஊற்றவும். மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாக சுடவும்.
- வெல்லம், தேங்காய் மற்றும் நெய் சேர்வதால் பனியாரம் மென்மையாகவும் இனிமையாகவும் இருக்கும். இது காலை உணவாகவும், சிற்றுண்டியாகவும் பரிமாற சிறந்தது.
- இந்த பணியாரத்தை தேங்காய் பாலில் ஊற வைத்து சாப்பிட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
ஜவ்வரிசி கொழுக்கட்டை
நாம் பலவகையான கொழுக்கட்டை சாப்பிட்டிருப்போம். ஆனால் ஜவ்வரிசியை வைத்து பாயாசம் வைத்துதான் சாப்பிட்டிருப்போம். ஆனால் இதை வைத்து வித்தியாசமான கொழுக்கட்டை செய்யலாம்.
தேவையானப் பொருட்கள்:
- ஜவ்வரிசி - 1 கப்
- அரிசி மாவு - ¼ கப்
- தேங்காய் துருவல் - ½ கப்
- வெல்லம் - ¾ கப்
- ஏலக்காய் பொடி - ½ டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். அதேசமயம் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வெல்லப்பாகு தயாரித்துக் கொள்ளவும், பின்னர் இதில் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
- பின்னர் இதில் அரிசி மாவும், ஊறிய ஜவ்வரிசியும் சேர்த்து கிளறி, அல்வா பதத்திற்கு வரும்வரை வேகவைக்கவும். கலவை குளிர்ந்ததும், கொழுக்கட்டை வடிவில் உருட்டி இட்லி தட்டில் வைத்து 10-12 நிமிடம் வேகவைக்கவும்.
- சுவையான ஜவ்வரிசி கொழுக்கட்டை தயார்.நெய்யில் வறுத்த முந்திரியை ஒவ்வொரு கொழுக்கட்டைக்குள்ளும் வைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
பாவாளை களி
இந்த பாவாளை களி தமிழ்நாட்டின் டெல்டா பாதிகளில் மிகவும் பிரபலமானது. பல வீடுகளில் விசேஷங்களுக்கு இந்த இனிப்பு செய்து கடவுளுக்கு படைக்கப்படும்.
தேவையானப் பொருட்கள்:
- பச்சரிசி - 1 கப்
- வெல்லம் - ஒன்றரை கப்
- தேங்காய் துருவல் - ½ கப்
- நெய் - 2 மேசை கரண்டி
- ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன்
- முந்திரி பருப்பு - 8 முதல் 12 (நறுக்கி, நெய்யில் வறுத்தது)
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- 1 கப் பச்சரிசியை 1 மணி நேரம் ஊறவைத்து, சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
- வெல்லத்தை தண்ணீரில் கரைத்து பாகு எடுத்து வைக்கவும். அரைத்த அரிசி மாவை தண்ணீரில் கலந்து அடுப்பில் வைத்து, நன்கு வெந்ததும் வெல்லப் பாகுவை சேர்க்கவும்.
- பின்னர் தொடர்ந்து கிளறி களி கெட்டியாக வரும் வரை சமைக்கவும். பிறகு தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, நெய் போன்ற பொருட்களை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான பாவாளை களி ரெடி!



Click it and Unblock the Notifications













