கோவைக்காயை இந்த பக்குவத்துல ஒருடைம் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..

Posted By:

Kovakkai Varuval Recipe In Tamil: மதியம் என்ன பொரியல் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கோவைக்காய் உள்ளதா? ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் கோவைக்காயை விரும்பி சாப்பிடமாட்டார்களா? அவர்களை கோவைக்காய் சாப்பிட வைக்க வேண்டுமா?

அப்படியானால் அவர்களுக்கு கோவைக்காயை இந்த பக்குவத்தில் வறுவல் செய்யுங்கள். இப்படி கோவைக்காய் வறுவலை செய்யும் போது, பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கும் போது, அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

Kovakkai Fry How To Make a Kovakkai Varuval Recipe

உங்களுக்கு கோவைக்காய் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவைக்காய் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைப்பதற்கு...

* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி வரமிளகாய் - 6
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* தேங்காய் - 1 சில்லு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கோவைக்காய் - 1/4 கிலோ (நீளவாக்கில் நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மல்லி, வரமிளகாய், சீரகம், மிளகு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* நல்ல மணம் வந்து, நிறம் லேசாக மாறியதும், அதை இறக்கி குளிர வைத்து, பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நீளவாக்கில் நறுக்கிய கோவைக்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி, மூடி வைத்து, 5-7 நிமிடம் கோவைக்காயை வேக வைக்க வேண்டும்.
* கோவைக்காய் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, 2-3 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான கோவைக்காய் வறுவல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, September 1, 2025, 14:20 [IST]
Desktop Bottom Promotion