Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
உடம்பில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் கொங்குநாட்டு கொள்ளு துவையல்... எப்படி செய்றது-ன்னு பாருங்க...
Kongunattu Kollu Thuvaiyal Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் அவ்வப்போது சுடுகஞ்சியை செய்து குடியுங்கள். அதுவும் கஞ்சிக்கு துவையல் தொட்டுக் கொண்டால், சுவை இன்னும் அட்டகாசமாக இருக்கும். துவையலில் பல வெரைட்டிகள் உள்ளன.
அதுவும் கொங்குநாட்டு கொள்ளு பருப்பு துவையல் மிகவும் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. இந்த துவையலை அடிக்கடி சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைந்து, உடல் ஃபிட்டாக இருக்கும். முக்கியமாக இந்த துவையல் சுடுகஞ்சிக்கு மட்டுமின்றி, சூடான சாதத்துடன் சேர்த்து பிரட்டி சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு கொங்குநாட்டு கொள்ளு பருப்பு துவையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாட்டு கொள்ளு துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முளைக்கட்டிய கொள்ளுப்பருப்பு/கொள்ளுப்பருப்பு - 250 கிராம்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 15-20
* பூண்டு - 5 பல்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பச்சை மிளகாய் - 4
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் முளைக்கட்டிய கொள்ளு பருப்பை நீரில் ஒருமுறை கழுவி
எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை முளைக்கட்டிய கொள்ளுபருப்பு
இல்லாவிட்டால் சாதாரண கொள்ளுப்பருப்பை எடுத்து நீரில் கழுவிக்
கொள்ளலாம்.
* பின் அந்த பருப்பை குக்கரில் போட்டு, பருப்பு மூழ்கும் அளவில் நீரை
ஊற்றி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, நீரை வடிகட்டி விட்டு தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய்
ஊற்றி சூடானதும், மல்லி, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நிறம்
மாறும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாயை சேர்த்து நிறம் மாற வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்த பருப்பை சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* இறுதியாக, மிக்சர் ஜாரில் வதக்கி பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்தால், சுவையான கொங்குநாட்டு
கொள்ளுப் பருப்பு துவையல் தயார்.



Click it and Unblock the Notifications