Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
எப்பவும் இட்லி, தோசை-ன்னு செஞ்சு போரடிக்குதா? அப்ப கொங்கு ஸ்பெஷல் உப்பு மிளகு ரொட்டியை ட்ரை பண்ணி பாருங்க..
Kongu Special Uppu Rotti Recipe In Tamil: காலையில் எப்பவும் இட்லி, தோசை என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் ஈஸியான காலை உணவை செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் விடுமுறை நாளில் தான் இப்படியெல்லாம் வித்தியாசமாக செய்து சாப்பிட முடியும்.
அப்படியானால் கொங்கு ஸ்பெஷல் உப்பு ரொட்டியை செய்யுங்கள். இந்த ரொட்டி காலை உணவாக மட்டுமின்றி, மாலை நேர ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த ரொட்டிக்கு தேங்காய் சட்னி அட்டகாசமான சைடு டிஷ்.

உங்களுக்கு கொங்கு ஸ்பெஷல் உப்பு ரொட்டியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உப்பு ரொட்டி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* இட்லி அரிசி - 1 கப்
* துவரம் பருப்பு - 1/4 கப்
* வரமிளகாய் - 2
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 5
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - சிறிது
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி மற்றும் துவரம் பருப்பை
எடுத்து நீரில் 2-3 முறை அலசி விட்டு, பின் நீரை ஊற்றி மூடி வைத்து 1
மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 1 மணிநேரம் கழித்து, ஊற வைத்த அரிசி பருப்பை நன்கு கழுவி, பின் அதை
மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் மிளகு, சீரகம், வரமிளகாய், சின்ன
வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு தூவி, 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு
பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், அரைத்து வைத்துள்ளதை கொஞ்சம் எடுத்து, அதை ஓரளவு
மெல்லியதாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,
சுவையான உப்பு ரொட்டி தயார்.



Click it and Unblock the Notifications
