1/2 கிலோ மட்டன் வாங்குனா இந்த கொங்கு ஸ்பெஷல் குருமாவை செய்யுங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...!

Posted By:

Kongu Special Mutton Gravy Recipe in Tamil: இந்த சண்டேக்கு மட்டன் வாங்க போறீங்களா? மட்டனை வைத்து குழம்பு செய்யப் போறீங்களா? ஒரே மாதிரி மட்டன் குழம்பு செஞ்சு போரடிக்குதா? அப்படினா வழக்கமான குழம்பு வைக்காம கொங்கு நாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க.

இந்த கொங்கு நாடு மட்டன் குருமா அட்டகாசமான சுவையில் இருப்பதோடு செய்வதற்கும் மிகவும் எளிதானதாக இருக்கும். இது இட்லி, தோசை, சப்பாத்தி, மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் சூப்பராக இருக்கும். இந்த கொங்கு ஸ்பெஷல் மட்டன் குழம்பு கொங்கு பகுதிகளில் மிகவும் பிரபலமானதாகும்.

Kongu Special Mutton Gravy Recipe How to Make Kongu Special Mutton Gravy

உங்களுக்கு கொங்கு ஸ்பெஷல் மட்டன் குருமாவை எப்படி வேசெய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்கு ஸ்பெஷல் மட்டன் குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மசாலா அரைக்க:

- சின்ன வெங்காயம் -200 கிராம்
- பூண்டு - 10 பல்
- சீரகம் - 1 ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 10
- தனியா -1 ஸ்பூன்
- இஞ்சி - 1 துண்டு
- துருவிய தேங்காய் -1 கப்

குழப்பு செய்ய:

- மட்டன் - 1/2 கிலோ
- சின்ன வெங்காயம் -200 கிராம்
- பச்சை மிளகாய் -2
- சோம்பு - 1/2 ஸ்பூன்
- பூண்டு - 10 பல்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- கருவேப்பிலை - 1 கொத்து
- எண்ணெய் - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

- முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், அதில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் தனியா சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து அதனை ஆற விட்டு மிக்சி ஜாரில் போடவும்.

- பின் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

- வெங்காயம் பொன்னிறமாக மாறியவுடன் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் மாற்றிவிட்டு , ஜாரில் சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- அடுப்பில் ஒரு குக்கரை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானவுடன், அதில் சோம்பு, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

- அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தையும் சேர்த்துக் கொண்டு நன்றாக வதக்கி விட வேண்டும்.

- வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின் மட்டனை சேர்த்து கொஞ்சம் கிளறி விட்டு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக வேகவைத்து விட்டு அதனுடன் அரைத்த வைத்துள்ள மசாலா சேர்த்து ஒரு முறை பிரட்டி எடுத்து கொண்டு உப்பு சேர்த்துக் நன்றாக கிளறி விட வேண்டும்.

- பின்பு குக்கரை மூடி விட்டு சுமார் 7 முதல் 8 விசில் வரும் வரை, அடுப்பை மிதமான தீயில் வைத்து , வேக வைத்துக்கொள்ள வேண்டும்.

- 8 விசில் வரை வெந்த பின் அடுப்பை அணைத்து விட்டு ஆவி அடங்கியவுடன் குக்கரை திறந்து குழம்பில் சிறிது சிறிது மல்லி தழையை சேர்த்து கிளறிவிட்டால் அருமையான கொங்கு நாடு மட்டன் குழம்பு ரெடி!

[ of 5 - Users]
Story first published: Sunday, November 16, 2025, 15:36 [IST]
Desktop Bottom Promotion