வீட்ல கொள்ளு இருக்கா? இப்படி தோசை செஞ்சு சாப்பிடுங்க... எடையும், இரத்தத்தில் சர்க்கரையும் டக்குனு குறையும்...

Posted By:

Kollu Dosai Recipe in Tamil: நமது முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு முக்கிய காரணம் அவர்களின் உணவுமுறைதான். நம்மைப்போல் துரித உணவுகளை உண்ணாமல் அவர்கள் தங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ப சத்தான உணவுகளை உண்டார்கள். தானியங்கள் அவர்கள் உணவுகளின் பிரதான அம்சமாக இருந்தது.

நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய பொருட்களில் ஒன்று கொள்ளு. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் தொடங்கி எடையைக் குறைப்பது வரை கொள்ளு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடும். மற்ற அனைத்து தானியங்களை விடவும் இதில் புரோட்டின் அதிகமுள்ளது.

Kollu Dosai Recipe How to Prepare Kollu Dosai

கொள்ளுப் பருப்பில் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ஏழைகளின் உணவாகும், ஏனெனில் இது ஒரு சிறிய அளவு உட்கொள்ளும் போது அதிக ஆற்றலை வழங்குகிறது. பொதுவாக தானியங்கள் என்றால் அவற்றை கஞ்சி வடிவில்தான் எடுத்துக் கொள்வோம், ஆனால் இதை நாம் தோசையாக செய்தே சாப்பிடலாம். இந்த பதிவில் கொள்ளு தோசை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:

- 2 கப் இட்லி அரிசி
- 2 கப் கொள்ளு
- 1/4 கப் உளுத்தம்பருப்பு
- 1/2 டீஸ்பூன் வெந்தயம் விதைகள்
- 6 சிவப்பு மிளகாய்
- 10 சிறிய வெங்காயம் அல்லது ஒரு பெரிய வெங்காயம்
- 1 அங்குல இஞ்சி
- 5 பூண்டு பல்
- உப்பு தேவையான அளவு
- கறிவேப்பிலை சிறிதளவு
- 1 சிட்டிகை பெருங்காயம்
- 2 டீஸ்பூன் சமையல் எண்ணெய்

செய்முறை:

- இட்லி அரிசி, கொள்ளு, உளுந்தம் பருப்பு மற்றும் வெந்தய விதைகளை ஒன்றாக சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

- பின்பு நன்றாக அலசி கழுவி வைத்துக் கொள்ளவும்.

- இதனுடன் வர மிளகாய், சிறிய வெங்காயம், இஞ்சி, பூண்டு கறிவேப்பிலை சேர்த்து மாவாக அரைக்கவும்.

- தோசை மாவு பதத்திற்கு வரும்வரை நைசாக அரைக்கவும். அரைக்கும் போது இடையில் சுமார் 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும்.

- பின்னர் மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி, பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

- இந்த மாவை குறைந்தது 4-5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

- தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். கல் காய்ந்ததும் அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை போல சுற்றவும்.

- சமையல் எண்ணெயை தோசையை சுற்றி ஊற்றி, தோசை பொன்னிறமாகும் வரை வேக வைக்கவும்.

- மொறுமொறுப்பான மெலிதான கொள்ளு தோசை ரெடி. வெங்காயம் மற்றும் பிற மசாலாப் பொருட்களைச் சேர்த்திருப்பதால், இந்த மாவை விரைவில் பயன்படுத்துவது நல்லது.

- தோசையை இட்லி பொடி மற்றும் வெல்லத்துடன் சாப்பிடலாம். இல்லையெனில் சட்னி அல்லது சாம்பாருடனும் பரிமாறலாம்.

[ of 5 - Users]
Story first published: Saturday, January 18, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion