Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்த கஞ்சியை தினமும் 1 டம்ளர் என ஒரு மாதம் குடிங்க.. 4 கிலோ வரை உடல் எடை சர்ர்ர்-ன்னு குறையும்.
Kollu Barley Kanji Recipe In Tamil: எடையைக் குறைப்பது தான் தற்போது பெரும்பாலானோரின் நோக்கமாக உள்ளது. அதற்காக பலர் காலையில் எழுந்ததும் ஜிம் என்று கடினமாக உடற்பயிற்சியை செய்து வருகிறார்கள். ஆனால் அது மட்டும் உடல் எடையைக் குறைக்க போதாது. நாம் உண்ணும் உணவுகளும் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரிகின்றன.
அதற்கு நாம் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் நிறைய உணவுப் பொருட்கள் உள்ளன. அதில் கொள்ளு, பார்லி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவ்விரண்டுமே உடல் எடையில் மாயங்களைப் புரியும். அதுவும் இவ்விரண்டையும் கொண்டு கஞ்சி தயாரித்து குடிக்கும் போது, உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைந்து வெளியேறிவிடும்.

உங்களுக்கு கொள்ளு பார்லி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு பார்லி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு பார்லி பவுடருக்கு...
* கொள்ளு - 1 கப்
* பார்லி - 1 கப்
* மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
கஞ்சிக்கு...
* தண்ணீர் - 2 டம்ளர்
* கொள்ளு பார்லி பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பூண்டு - 2 பல்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளுவை சேர்த்து,
நிறம் மாறி படபடவென்று வெடிக்கும் வரை வறுத்து இறக்கி, ஒரு தட்டில்
போட்டு குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பார்லியை சேர்த்து, நிறம்
மாற வறுத்து இறக்கி, அதையும் ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள்
ஸ்பூன் மிளகு விதைகளை சேர்த்து வறுத்து இறக்கி, பார்லியுடன்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் சீரகத்தை சேர்த்து லேசாக வறுத்து இறக்கி, அதையும்
பார்லியுடன் சேர்த்துக் குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் முதலில் வறுத்த கொள்ளு விதைகளை சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்து பொடி செய்து, ஒரு அகலமான தட்டில் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே ஜாரில் வறுத்த பார்லி, மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த பார்லி பொடியை கொள்ளு பொடியுடன் சேர்த்து நன்கு
கலந்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்
தினமும் காலையில் கஞ்சிக்கு அந்த பொடியை பயன்படுத்த வேண்டும்.
* இந்த கொள்ளு பார்லி கஞ்சியை செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் 2 கப்
நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, நீரை சூடேற்ற வேண்டும்.
* நீர் சூடானதும், அதில் 2 டேபிள் ஸ்பூன் அரைத்த பார்லி பொடியை
சேர்த்து, கைவிடாமல் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் பூண்டு சுவை
பிடிக்குமானால், அதில் 2 பல் பூண்டு பற்களைத் தட்டிப் போட்டு ஓரளவு
கெட்டியாகத் தொடங்கும் வரை கிளறி விட வேண்டும்.
* கஞ்சியானது ஓரளவு கெட்டியானதும், அதை இறக்கினால், சுவையான பார்லி
கொள்ளு கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications





