Latest Updates
-
பரோட்டா கடை சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பற்கள் முத்துப்போல பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த உணவுகளை தினமும் சேர்த்துக்கோங்க -
இந்த 4 பொருட்களை மற்றவர்களிடம் இருந்து கடனா வாங்கிடாதீங்க.. இல்ல உங்கள துரதிர்ஷ்டம் துரத்தும்..! -
கோதுமை மாவு நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கணுமா? அப்ப இந்த பொருளை யூஸ் பண்ணுங்க போதும் -
டிசம்பர் தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
ஜீன்ஸ் பேண்ட்டின் முன்பக்கத்தில் ஏன் ஒரு சிறிய பாக்கெட் உள்ளது - இதற்கு பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
இந்தியாவின் 'ஆன்மீகத் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
அரிசி மாவு இருந்தா.. கார்த்திகை தீபத்துக்கு இந்த பனை ஓலை கொழுக்கட்டை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
கார்த்திகை தீபம் ஏற்றும் போது இந்த 5 தவறை செஞ்சுடாதீங்க.. இல்ல தீபம் ஏற்றியும் புண்ணியம் கிடைக்காது! -
கார்த்திகை தீப ஸ்பெஷல் செட்டிநாடு மிளகு சீரக அடை ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும்
5 தக்காளி இருந்தா இந்த கேரளா ஸ்டைல் தக்காளி தொக்கை செஞ்சு பாருங்க - தாறுமாறான சைடிஷா இருக்கும்
Kerala Style Tomato Thokku Recipe in Tamil: பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் பிரதான காலை உணவு அல்லது இரவு உணவாக இருப்பது இட்லி அல்லது தோசைதான். இட்லி, தோசை என்றாலே அதற்கு சிறந்த சைடிஷாக இருப்பது தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னிதான். ஏனெனில் அவைதான் எளிதில் செய்யக்கூடியவை. இது தவிர நேரம் இருக்கும்போது சாம்பார் அல்லது குருமா போன்றவற்றை சைடிஷாக செய்வோம்.

உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு தக்காளி சட்னி பிடிக்குமா? அப்படினா வழக்கமான தக்காளி சட்னி போல அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக கேரளா ஸ்டைலில் தக்காளி தொக்கை செஞ்சு பாருங்க. இந்த கேரளா ஸ்டைல் தக்காளி தொக்கு இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். இந்த கேரளா ஸ்டைல் தக்காளி தொக்கு சுவையானது மட்டுமல்ல செய்வதற்கு எளிதானதும் கூட. இந்த தக்காளி தொக்கு செய்து கொடுத்தால் 4 இட்லி சாப்பிடுபவர்கள் கூட 8 இட்லி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு கேரளா ஸ்டைல் தக்காளி தொக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் தக்காளி தொக்கின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 5 தக்காளி, பொடியாக நறுக்கியது
- 2 பச்சை மிளகாய், நறுக்கியது
- 5 சின்ன வெங்காயம், பாதியாக நறுக்கியது
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
அரைக்கத் தேவையானவை:
- 1/4 கப் துருவிய தேங்காய்
- 1 ஸ்பூன் சீரகம்
செய்முறை:
- கேரளா ஸ்டைல் தக்காளி தொக்கை செய்வதற்கு, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அவை லேசான பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- தக்காளி மென்மையாகவும், குழைவாகவும் வரும் வரை, மிதமான தீயில் வேகவிடவும்.
- தக்காளி வெந்து கொண்டிருக்கும் வேளையில், துருவிய தேங்காய் மற்றும் சீரகத்தை 1/4 கப் வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- தக்காளி மென்மையாக மாறியதும், அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையைச் சேர்த்து, குறைந்த தீயில் மேலும் 3 முதல் 4 நிமிடங்கள் வேகவைத்து, அடுப்பை அணைத்துவிடவும்.
- உப்பு மற்றும் மசாலாப் பொருட்களைச் சரிபார்த்து, தேவைக்கேற்பச் சரிசெய்து கொள்ளவும்.
- குழம்பு நன்கு கொதித்து தொக்காக மாறியதும் அடுப்பை அணைத்து நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி கிளறினால் சுவையான கேரளா ஸ்டைல் தக்காளி தொக்கு ரெசிபி.



Click it and Unblock the Notifications
