மட்டன் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...!

Posted By:

Kerala Style Mutton Kurma Recipe in Tamil: இந்த சண்டேக்கு மட்டன் வாங்க போறீங்களா? மட்டனை வைத்து குழம்பு செய்யப் போறீங்களா? அப்படினா வழக்கமான குழம்பு வைக்காம கேரளா ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க. உங்களுக்கு கேரளா ஸ்டைல் குருமா வைக்க தெரியாதா?

இந்த கேரளா ஸ்டைல் மட்டன் குழம்பு 30 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இது இட்லி, தோசை, சப்பாத்தி, மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு கேரளா ஸ்டைல் மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Kerala Style Mutton Kurma Recipe How to Prepare Kerala Style Mutton Kurma

தேவையானப் பொருட்கள்:

- பொடியாக நறுக்கிய மட்டன் - 1/2 கிலோ
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
- இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
- பூண்டு - 8 பல்
- தேங்காய் பால் - 1/2 கப்
- பட்டை - 1
- ஏலக்காய் - 3
- கிராம்பு - 3
- சோம்பு - 1 டீஸ்பூன்
- கசகசா - 1 டீஸ்பூன்
- மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
- ஊற வைத்த முந்திரி - 10 (நீரில் ஊற வைத்து, பேஸ்ட் செய்தது)
- மிளகு தூள் - 1 டீஸ்பூன்
- வினிகர் - 1 டீஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- நறுக்கிய கொத்தமல்லி - சிறிது
- உப்பு - தேவையான அளவு

செய்முறை:

- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் கசகசா சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

- பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

- பின்னர் இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, மஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து 3 நிமிடம் கிளறி இறக்கி விட வேண்டும்.

- பின்பு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு மென்மையான பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

- பின்னர் மட்டனை நன்கு கழுவி, அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

- பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து கிளறி விட வேண்டும்.

- பின்னர் தேங்காய் பால், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

- பின் குக்கரில் உள்ள மட்டனை மட்டன் வேகவைத்த நீருடன் வாணலியில் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும்.

- பின்பு அத்துடன் வினிகர், முந்திரி பேஸ்ட் சேர்த்து, குழம்பு சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

- இப்போது சுவையான கேரளா ஸ்டைல் மட்டன் குருமா ரெடி. இந்த குருமா இட்லி, தோசை, சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Saturday, May 10, 2025, 22:54 [IST]
Desktop Bottom Promotion