சன்டே ஸ்பெஷல்: கேரளா ஸ்டைல் மட்டன் கிரேவி

Posted By:

Kerala Style Mutton Gravy: இந்த வார விடுமுறையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஸ்பெஷலாக ஏதாவது சமைத்துக் கொடுத்து அசத்த விரும்புகிறீர்களா? இந்த வாரம் வீட்டில் மட்டன் வாங்கி சமைக்கப் போகிறீர்களா? அப்படியானால் கேரளா ஸ்டைல் மட்டன் கிரேவியை செய்யுங்கள்.

இந்த மட்டன் கிரேவி செய்வது மிகவும் சுலபம் மற்றும் அட்டகாசமான ருசியுடனும் இருக்கும். முக்கியமாக இது சாதம், சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இதை சமைக்கலாம்.

Kerala Style Mutton Gravy Recipe In Tamil

உங்களுக்கு கேரளா ஸ்டைல் மட்டன் கிரேவி எப்படி செய்வததென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் மட்டன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மட்டன் - 1/2 கிலோ
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 12 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* நறுக்கிய தேங்காய் - 1/4 கப்
* மிளகாய் தூள் - 3/4 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1-2 சிட்டிகை
* கரம் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - 1 1/4 கப்
* தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் மட்டனை நன்கு கழுவி, நீரை வடிகட்டி விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், தேங்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் அல்லது பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் கழுவி வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக குக்கரை மூடி குறைவான தீயிலி வைத்து, 3 வில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மேலே கொத்தமவ்வியைத் தூவினால், சுவையான கேரளா ஸ்டைல் மட்டன் கிரேவி தயார்.

Image Courtesy: yummyntasty

[ of 5 - Users]
Story first published: Sunday, May 28, 2023, 11:00 [IST]
Desktop Bottom Promotion