Latest Updates
-
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...!
நாவூறும்.. ருசியான.. காயல்பட்டினம் மிளகு சிக்கன் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Kayalpatnam Milagu Chicken Recipe In Tamil: மாத கடைசியில் பெரும்பாலானோரின் வீடுகளில் சிக்கன் தான் வாங்கி சமைப்போம். அது தான் கட்டுபடியாகும். உங்கள் வீட்டிலும் அப்படிதானா? அப்படி வாங்கும் சிக்கனை கொண்டு ஒரு வித்தியாசமான ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் காயல்பட்டினம் மிளகு சிக்கனை செய்யுங்கள். தற்போதைய குளிர்ச்சியான காலநிலையில் மிளகு சேர்த்து சிக்கனை சமைத்து நன்கு காரசாரமாக சாப்பிடும் போது, உடலுக்கு இதமாகவும் இருக்கும், ருசியாகவும் இருக்கும்.

உங்களுக்கு காயல்பட்டினம் மிளகு சிக்கனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காயல்பட்டினம் மிளகு சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 5
* மிளகு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1 கிலோ
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
* அரைத்த பவுடர்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை மிளகாய் - 2
தாளிப்பு பொருட்கள்...
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
கிரேவிக்கு...
* நெய் - 2 டீஸ்பூன்
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* அரைத்த பவுடர் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* பாதாம், முந்திரி - 10 (நீரில் ஊற வைத்து)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு,
ஏலக்காய், மிளகு, சீரகம், சோம்பு, மல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு
வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக
பொடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை எடுத்து, அத்துடன் இஞ்சி,
பூண்டு பேஸ்ட், தயிர், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் பச்சை
மிளகாய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடியில் ஒரு ஸ்பூன் மட்டும்
தனியாக எடுத்து வைத்துவிட்டு, மீதமுள்ள அனைத்து பொடியையும் சேர்த்து
நன்கு சிக்கனை பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து தாளிப்பதற்கான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதற்கு ஒரு தட்டில் இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், பட்டை, கிராம்பு,
ஏலக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் தேங்காய்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் தாளிப்பதற்கு எடுத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தனியாக எடுத்து வைத்துள்ள அரைத்த பவுடரை சேர்த்து
கிளறி, ஊற வைத்த சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து, சிக்கனை
10 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் ஊற வைத்த பாதாம், முந்திரியை சிறிது நீர்
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, சிக்கன் வெந்ததும், அரைத்து
வைத்துள்ள பாதாம் முந்திரி விழுதை சேர்த்து கிளறி, உப்பு சுவை
பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, மீண்டும் 3-4 நிமிடம்
கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான காயல்பட்டினம் மிளகு சிக்கன்
தயார்.



Click it and Unblock the Notifications











