Latest Updates
-
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும்
காஷ்மீர் ஸ்டைல் மட்டன் குருமா ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...!
Kashmiri Mutton Curry Recipe in Tamil: சண்டே வந்தாலே அது அசைவம் சாப்பிடுவதற்கான நாள் என்று மாறிவிட்டது. மற்ற நாட்களில் அசைவம் சாப்பிட்டாலும் சண்டே சாப்பிடும் அசைவம் எப்போதும் ஸ்பெஷல்தான். இந்த சண்டேக்கு மட்டன் வாங்க போறீங்களா? மட்டனை வைச்சு குழம்பு வைக்கப் போறீங்களா? அப்படினா வழக்கமான மட்டன் குழம்பு வைக்காம காஷ்மீர் ஸ்டைல் மட்டன் குருமா வைச்சு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.
இந்த காஷ்மீர் ஸ்டைல் மட்டன் குழம்பு விரைவாக செய்யக்கூடியது மற்றும் சுவையானது. இது இட்லி, தோசை, சப்பாத்தி, மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு காஷ்மீர் ஸ்டைல் மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையானப் பொருட்கள்:
- மட்டன் - ½ கிலோ( சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
- புளிக்காத தயிர் - 1 கப்
- நறுக்கிய வெங்காயம் - 2
- இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- காஷ்மீர் மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
- சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
- சோம்பு தூள் - 1½ டீஸ்பூன் (முக்கியமானது)
- சோம்பு - ½ டீஸ்பூன்
- பட்டை - 1 துண்டு
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 2
- தேங்காய் பால் - ¼ கப்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- நெய் - 2 ஸ்பூன்
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
செய்முறை:
- முதலில் மட்டனை நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு போட்டு தாளிக்கவும்.
- மசாலா வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து அதன் நிறம் மாறும் வரை 5 முதல் 10 நிமிடம் வரை வதக்கவும்.
- மட்டன் பாதி வெந்ததும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், சீரக தூள், சோம்பு தூள் சேர்த்து கிளறவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் தயிரை மெதுவாக ஊற்றி கொதிக்க விடாமல், அடிக்கடி கிளறவும்.
- இந்த கலவை எண்ணெய் பிரியும் வரை மிதமான தீயில் மெதுவாக சமைக்கவும்.
- தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து 20-30 நிமிடம் குறைந்த தீயில் கிளறிக்கொண்டே வேகவைக்கவும்.
- கிரேவி நன்கு இறுகி கெட்டியானவுடன் அடுப்பை அணைக்கவும்.
- அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் 2 ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கிளறி விடவும்.
- இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான காஷ்மீரி மட்டன் ரெடி!
- இது தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications
