Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
வீட்டுல கறிவேப்பிலை அதிகமா இருக்கா? இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்...
Karuveppilai Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் கறிவேப்பிலை அதிகமாக உள்ளதா? கறிவேப்பிலையை தூக்கி எறிய மனம் இல்லையா? அப்படியானால் அந்த கறிவேப்பிலையைக் கொண்டு குழம்பு செய்யுங்கள். கறிவேப்பிலை வைத்து குழம்பு செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
அதுவும் தலைமுடி அதிகம் உதிரும் போது, கறிவேப்பிலை உணவில் அதிகம் சேர்ப்பது தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். அதிலும் கறிவேப்பிலையைக் கொண்டு குழம்பு செய்தால், அது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு கறிவேப்பிலை குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 3 கப்
* சின்ன வெங்காயம் - 10
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 10 பல்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* புளிச்சாறு - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கறிவேப்பிலையை சேர்த்து 2-3 நிமிடம் ரோஸ்ட் செய்து
இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், கடுகு, வெந்தயம், பெருங்காயத்
தூள், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்,
பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து
நன்கு கிளறி, அரைத்த கறிவேப்பிலையை சேர்த்து, அத்துடன் புளிச்சாற்றினை
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் வெல்லத்தை சேர்த்து கிளறி, 10
நிமிடம் நன்கு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கினால்,
சுவையான கறிவேப்பிலை குழம்பு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications