Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
இந்த அரிசி உப்புமாவை அடிக்கடி சாப்பிட்டா எடை வேகமாக குறைவதுடன் இதயமும் ஆரோக்கியமாக இருக்குமாம்...!
Karuppu Kavuni Arisi Upma Recipe In Tamil: தற்போது பெரும்பாலான மக்கள் வெள்ளை அரிசிக்கு மாற்றாக வரகு, திணை போன்ற பல்வேறு ஆரோக்கியமான அரிசி வகைகளுக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பெரும்பாலான மக்கள் விரும்பும் ஒரு அரிசிதான் கருப்பு கவுனி அரிசி.
கருப்பு கவுனி அரிசி, கருப்பு அரிசி அல்லது அரசர்களின் அரிசி என்று அழைக்கப்படுகிறது. கருப்பு அரிசியின் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது, சரும பிரகாசத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இது ஆரோக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சிறந்த உணவு தானியமாக கொண்டாடப்படுகிறது.
கருப்பு கவுனி அரிசியை பொதுவாக மக்கள் கஞ்சி வைத்தே குடிக்கின்றனர், ஆனால் அனைவருக்கும் இந்த கஞ்சி பிடிக்குமா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்த சூழ்நிலையில் இந்த அரிசியை வேறு வடிவில் சமைப்பது இந்த அரிசியை பிடிக்காதவர்களை சாப்பிட வைக்கும். இந்த பதிவில் கருப்பு கவுனி அரிசியை வைத்து எப்படி உப்புமா செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- கருப்பு கவுனி அரிசி - 1/2 கப்
- 2 டீஸ்பூன் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 1 ஸ்பூன் கடலைப் பருப்பு
- 1 வர மிளகாய்
- 2-3 நறுக்கிய பச்சை மிளகாய்
- ஒரு கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் துருவிய இஞ்சி
- 1 கப் நறுக்கிய வெங்காயம்
- வறுத்த முந்திரி அல்லது வேர்க்கடலை
- 1 கப் கேரட், பீன்ஸ் போன்ற நறுக்கிய காய்கறிகள்
- 1/4 கப் பச்சை பட்டாணி
- நறுக்கிய கொத்தமல்லி
- 1 ஸ்பூன் நெய்
- 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
- உப்பு தேவைக்கேற்ப
செய்முறை:
- கருப்பு கவுனி அரிசியை நன்கு கழுவி வைக்கவும். நன்றாக காயும்படி ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
- ஓரளவு காய்ந்த பின் ஒரு கடாயில் 4-5 நிமிடங்கள் வறுத்தெடுத்து உலர வைக்கவும். பிறகு மிக்சியில் போட்டு ரவை போல் சிறிது கரடுமுரடான பொடியாக அரைத்து தனியாக வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு மற்றும் காய்ந்த மிளகாயை போட்டுத் தாளிக்கவும். கடுகு வெடித்ததும், பச்சை மிளகாய், உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்டது, ஒரு நிமிடம் வதக்கவும்.
- பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் முந்திரி சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். இப்போது நறுக்கி வைத்த அனைத்து காய்கறிகள் மற்றும் பச்சை பட்டாணியை சேர்க்கவும். இதனை 2-3 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் 2 கப் தண்ணீர் மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும்.தண்ணீர் நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும். பிறகு மெதுவாக அரைத்த கருப்பு அரிசியைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.
- உப்புமா பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும். சூடாக இருக்கும் போதே நெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். அடுப்பை விட்டு இறக்கியதும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
- இந்த அற்புதமான ஆரோக்கியமான உப்புமாவுடன் தேங்காய் சட்னி சேர்த்து காலை உணவாக பரிமாறினால் இந்த அரிசி பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.



Click it and Unblock the Notifications





