Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
இந்த கஞ்சியை காலையில 2 கப் குடிச்சுட்டு வந்தா.. உடல் எடை மடமடன்னு குறையும்.. ட்ரை பண்ணி பாருங்க..
Karuppu Kavuni Arisi Kanji Recipe In Tamil: நீங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளீர்களா? எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது சரியான காலை உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அப்படி உட்கொண்டால் தான் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். அப்படி உடலுக்கு வலு சேர்க்கும் மற்றும் உடல் எடையைக் குறைக்க உதவும் ஒரு அற்புதமான காலை உணவு தான் கருப்பு கவுனி கஞ்சி.
இந்த கஞ்சியை தினமும் காலையில் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். இந்த கஞ்சி செய்வது மிகவும் சுலபம். மேலும் இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த கஞ்சியை குடித்து வரும் போது உடலில் கொழுப்புக்கள் தேங்காமல் உடல் ஃபிட்டாக இருக்கும்.

உங்களுக்கு கருப்பு கவுனி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு கவுனி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கருப்பு கவுனி அரிசி - 1 கப்
* தண்ணீர் - 4 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு கப் கருப்பு கவுனி அரிசியை நீரில் இரண்டு முறை
கழுவிவிட்டு, பின் கழுவிய அரிசியுடன் 2 கப் நீரை ஊற்றி, இரவு
முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் அரிசி ஊற வைத்த நீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில்
எடுத்துக் கொண்டு, அரிசியை மட்டும் மிக்சர் ஜாரில் போட்டு, சற்று
கொரகொரவென்று பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை எடுத்து, அதில் பொடித்த அரிசியை சேர்த்து,
அத்துடன் அரிசி ஊற வைத்த 2 கப் நீரை ஊற்றி, கூடுதலாக 2 கப் நீரையும்
ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக
நறுக்கிய கேரட் மற்றும் பூண்டு பற்களை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் சீரகத்தை கைகளால் நசுக்கி சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி நன்கு கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, குறைவான தீயில்
வைத்து 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, அதில் துருவிய தேங்காயை ஒரு
கைப்பிடி சேர்த்து, சிறிது நறுக்கிய கொத்தமல்லியையும் தூவி கிளறி
பரிமாறினால், சுவையான கருப்பு கவுனி அரிசி கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications






