Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
கர்நாடகா ஸ்டைல் உப்புமா சட்னி காம்போ ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு பாருங்க... காலைல சாப்பிட செமையா இருக்கும்...
Karnataka Style Upma Chutney Combo Recipe in Tamil: காலையில் எப்போதும் ஒரே மாதிரியான டிபனை செய்து போரடித்துவிட்டதா? தற்போது காலையில் மிகவும் குளிராக இருப்பதால், சூடாக, காரமாக சாப்பிடத் தோன்றும். எனவே கர்நாடகா ஸ்டைலில் நீர் உப்பிட்டு சட்னி கம்போவை காலையில் செய்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
இது வேறொன்றுமில்லை நம்ம ஊர் ரவா உப்புமாவையே கொஞ்சம் வித்தியாசமாக செய்து அதில் கர்நாடகா ஸ்பெஷல் சட்னியை தாராளமாக ஊற்றி சாப்பிடுவததுதான். வழக்கமாக ரவா உப்புமாவை செய்து போரடித்து விட்டால் இந்த காம்போவை முயற்சித்துப் பாருங்கள். இது செய்வதற்கு மிகவும் எளிதாக இருபத்தோடு சுவையும் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் ரவை உப்புமாவும், தண்ணி சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா ஸ்டைல் ரவை உப்புமா தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
கர்நாடகா ரவை உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:
- 1/2 கப் நடுத்தர ரவை
- 3 கப் தண்ணீர்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 ஸ்பூன் வேர்க்கடலை
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 பெரிய வெங்காயம்
- ஒரு சிட்டிகை மஞ்சள்
- கால் ஸ்பூன் பெருங்காயம்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் நெய்
- 1/2 ஸ்பூன் சர்க்கரை
- உப்பு தேவையான அளவு
- சிறிதளவு கொத்தமல்லி இலைகள்
சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
- 1/2 கப் தேங்காய்
- 1/4 கப் பொட்டுக்கடலை
- 2 பச்சை மிளகாய்
- சிறிய துண்டு இஞ்சி
- சிறிதளவு கொத்தமல்லி இலைகள்
- சுவைக்கேற்ப புளி
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- ஒரு அகன்ற பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, ரவையை மிதமான தீயில் வைத்து, அது நிறம் மாறி நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகை சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
- பருப்பு நிறம் மாறியதும் துருவிய இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- அதன்பின் மஞ்சள், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- அதன்பின் தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- தண்ணீர் நன்றாக கொதிக்கத் தொடங்கியதும் வறுத்த ரவையை கொட்டி நன்றாக கிளறவும்.
- பின்னர் 1 ஸ்பூன் நெய்யையையும், சர்க்கரையையும் சேர்த்து கிளறவும்.
- இறுதியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்க்கவும்.
- அடிக்கடி கிளறி உப்புமா நல்ல பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- சட்னி அரைக்க ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை எடுத்துக் கொள்ளவும்.
- தேவையான அளவு உப்பு மற்றும் புளி மற்றும் தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு போட்டு தாளிக்கவும்.
- கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னி மீது கொட்டி நன்றாக கிளறவும்.
- அவ்வளவுதான் சூடான உப்புமா மீது தாராளமாக சட்னி ஊற்றி நன்றாக பிசைந்து சாப்பிடவும்.



Click it and Unblock the Notifications