Latest Updates
-
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
வீட்டுல 1 முள்ளங்கி இருக்கா? இந்த மாதிரி கர்நாடகா ஸ்டைலில் சட்னி செய்யுங்க.. அசத்தலா இருக்கும்...
Karnataka Style Mullangi Chutney Recipe: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? எப்போதும் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ஏதாவது சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முள்ளங்கி உள்ளதா?
இதுவரை நீங்கள் முள்ளங்கியைக் கொண்டு சாம்பார் தான் செய்திருப்பீர்கள். அந்த முள்ளங்கியைக் கொண்டு சட்னி செய்துள்ளீர்களா? இல்லையென்றால், இன்று அதை முயற்சி செய்து பாருங்கள். இந்த முள்ளங்கி சட்னி கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது.

உங்களுக்கு முள்ளங்கி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முள்ளங்கி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முள்ளங்கி - 1
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி வரமிளகாய் - 4
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* புளி - 1 எலுமிச்சை அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் முள்ளங்கியை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, துருவிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயத் தூள்,
வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக
வறுத்து இறக்கி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் முள்ளங்கி
மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி பச்சை வாசனை போக
நன்கு வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் மற்றும் வதக்கி காய்கறியை
சேர்த்து, அத்துடன் புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த
சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான முள்ளங்கி சட்னி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications