Latest Updates
-
பூரிக்கு இப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க... -
அக்டோபர் 04 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் -
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம்
கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Karnataka Special Akki Rotti With Tomato Chutney Recipe In Tamil: காலையில் ஒரே மாதிரியான டிபனை செய்து போரடித்துவிட்டதா? சற்று புதுமையான காலை டிபனை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டியை செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக தக்காளி சட்னியை செய்யுங்கள். இந்த டிபன் காம்போ செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். முக்கியமாக ஒருமுறை இந்த டிபனை செய்தால், நிச்சயம் வாரம் ஒருமுறை இந்த டிபனை செய்வீர்கள்.

உங்களுக்கு இந்த கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டியும், தக்காளி சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டி, தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தக்காளி சட்னிக்கு...
* வரமிளகாய் - 4
* காஷ்மீரி வரமிளகாய் - 4
* உப்பு - சுவைக்கேற்ப
* பூண்டு - 10 பல்
* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
* தக்காளி - 3 (நறுக்கியது)
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - சிறிது
* அரைத்த சட்னி
அக்கி ரொட்டிக்கு...
* பச்சரிசி மாவு - 1 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1
* கேரட் - 1
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வரமிளகாய் மற்றும் காஷ்மீரி வரமிளகாயை
எடுத்துக் கொண்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சட்னி தாளிப்பதற்கு 4
டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த சட்னியை சேர்த்து கிளறி, 5 நிமிடம் பச்சை
வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், தக்காளி சட்னி தயார்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, சுவைக்கேற்ப உப்பு, சீரகம்
ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து,
துருவிய 1 கேரட்டை சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் கொத்தமல்லி, துருவிய தேங்காய், புளிப்பில்லாத தயிர்
சேர்த்து முதலில் கைகளால் பிசைந்து விட வேண்டும்.
* பின் கொஞ்சம் கொஞ்சமாக நீரை தெளித்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு
பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பட்டர் ஷீட் அல்லது வாழை இலையை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* அதில் சிறிது எண்ணெய் தடவி, பிசைந்து வைத்துள்ள மாவை சிறிது எடுத்து
உருட்டி அதன் மேல் வைத்து, தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். பின்
ஆங்காங்கு விரலால் துளையிட வேண்டும். இதனால் நடுப்பகுதி நன்கு
வேகும்.
* இறுதியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தட்டி
வைத்துள்ளதை சேர்த்து எண்ணெய் ஊற்றி, முன்னும், பின்னும் பொன்னிறமாக
வேக வைத்து எடுத்தால், சுவையான அக்கி ரொட்டி தயார்.



Click it and Unblock the Notifications
