கர்நாடகா ஸ்பெஷல் கெம்பு சட்னி ரெசிபி... ஒரு தடவை செஞ்சு பாருங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்...!

Posted By:

Karnataka Kempu Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு எப்பவுமே சைடிஷ் அப்படினா சட்னி இல்லனா சாம்பார் தான். என்ன சட்னி செய்யலாம்னு யோசிச்சு யோசிச்சே உங்களுக்கு தலைவலி வந்துவிடுகிறதா? எப்போதும் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ஏதாவது சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொஞ்சம் வர மிளகாயும், பூண்டும் உள்ளதா?

அப்படியானால் இன்று சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட கர்நாடகா ஃபேமஸ் கெம்பு சட்னியை முயற்சி செய்து பாருங்கள். இந்த சட்னி பார்ப்பதற்கு மிளகாய் சட்னி போல இருந்தாலும் இதில் சேர்க்கப்படும் பொருட்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. இந்த கெம்பு சட்னி கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. இந்த கெம்பு சட்னி இட்லி, தோசை மற்றும் கர்நாடக ஃபேமஸ் அக்கி ரொட்டி போன்றவற்றுக்கு சூப்பர் சைடிஷா இருக்கும். இந்த சட்னி சுவையானதாக இருப்பதோடு இதை செய்வதும் மிகவும் எளிதானது.

Karnataka Kempu Chutney Recipe How to Make Karnaraka Kempu Chutney

உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் கெம்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வறுத்த கெம்பு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 10 வர மிளகாய்
- 1 பெரிய வெங்காயம், நறுக்கியது
- 2 டீஸ்பூன் வெல்லம்
- 1 டீஸ்பூன் புளி சாறு
- ½ டீஸ்பூன் சீரகம்
- 2 கொத்தமல்லி தண்டுகள் நறுக்கியது
- 5 பூண்டு பல்
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் எண்ணெய்
- ¼ டீஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை:

- ஒரு சிறிய கடாயில் போதுமான தண்ணீர் சேர்த்து, 10 வர மிளகாய்களைச் சேர்த்து அடுப்பில் வைத்து 5 கொதிக்க வைக்கவும். பின்னர் மூடி வைத்து, மென்மையாகும் வரை பத்து நிமிடங்கள் ஒதுக்கி வைக்கவும்.

- ஒரு கடாயில் ½ டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.

- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

- ஒரு மிக்ஸி ஜாரில் வர மிளகாய், வறுத்த வெங்காயம், 5 பூண்டு பல், நறுக்கிய தண்டுகள் கொத்தமல்லி இலை மற்றும் தண்டுகள், ஒரு டீஸ்பூன் புளிச்சாறு, 2 டீஸ்பூன் வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

- கொரகொரப்பான சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.

- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும், எண்ணெய் சூடானதும், ¼ தேக்கரண்டி கடுகு சேர்க்கவும். அவை வெடிக்கத் தொடங்கியதும், கறிவேப்பிலை சேர்க்கவும்.

- கறிவேப்பிலை நிறம் மாறியதும் இதை சட்னியில் கொட்டி நன்றாக கிளறவும்.

- அவ்வளவுதான் சூப்பரான கெம்பு சட்னி ரெடி. இதை சூடான் இட்லி, தோசையுடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion