Latest Updates
-
செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெசிபி - உருளைக்கிழங்கை இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பணத்தாசை கொண்டவர்களாம் - இவங்களுக்கு பணம்தான் முக்கியமாம் -
உங்கள் கையில் விதி ரேகை இல்லாமல் இருப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? உண்மை என்னனு தெரிஞ்சிக்கோங்க -
வாஸ்துப்படி இந்த 5 சிலைகளை வீட்டுல வாங்கி வையுங்க.. வீட்டில் பணப்பிரச்சனையே வராது.. -
தலையணைக்கு அடியில் இந்த 5 பொருட்களில் ஒன்றை வைத்து தூங்குவது உங்களுக்கு சகல நன்மைகளையும் கொடுக்குமாம் -
1 கப் அவலும், 1 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
2 முட்டை இருந்தா இந்த மாதிரி அவிச்ச முட்டை ஆம்லெட் ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா வேற லெவலில் இருக்கும் -
உங்க தலைமுடி வறண்டு தேங்காய் நார் போல் இருக்கா? அப்ப வீட்டிலேயே இந்த கெரட்டின் ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
பீர்க்கங்காய் வெச்சு இப்படி ஒருடைம் பருப்பு கறி செய்யுங்க.. சாதம், இட்லி, தோசைக்கும் செமயா இருக்கும்..
5 தக்காளியும், 3 வரமிளகாயும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
Tomato Kara Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி, தோசை தான் செய்வீர்களா? அதற்கு எப்போதும் ஒரே சுவையில் தான் சட்னியை செய்விர்களா? சற்று வித்தியாசமான சைடு டிஷ் சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வெங்காயம், தேங்காய் என்று எதுவும் இல்லையா?
வெறும் தக்காளியும், வரமிளகாயும் தான் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அட்டகாசமான சுவையில் சட்னி செய்யலாம். இந்த கார சட்னியை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த கார சட்னி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். பேச்சுலர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் இப்படிப்பட்ட சட்னியை தெரிந்து வைத்துக் கொண்டால், அவசர நேரத்தில் கைக்கொடுக்கும்.

இந்த தக்காளி கார சட்னி குறித்து குக்கிங்வேர்ல்டு29 என்னும் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த தக்காளி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 5
* வரமிளகாய் - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் 5 தக்காளி, 3
வரமிளகாயை சேர்த்து 5 நிமிடம் நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் வேக வைத்த தக்காளி மற்றும் வரமிளகாயை மிக்சர் ஜாரில் சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள், கறிவேப்பிலை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்கு கிளறி,
மிளகாய் தூள் சேர்த்து கலந்து, 5 நிமிடம் பச்சை வாசனை போய் எண்ணெய்
பிரிந்து வரும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கார
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
