Latest Updates
-
நாளை நடக்கும் எம நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தலைவிதி மாறும், செல்வம் பெருகும்.. -
உங்களுக்கு வெற்றி, பணம் குவியணுமா? அப்ப சாணக்கியர் கூறும் இந்த 4 காலை பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
முட்டையும், குடைமிளகாயும் இருந்தா.. ஒருடைம் இத ட்ரை பண்ணுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
ஜூலை 15-ல் குரு அஸ்தமனமாவதால் இந்த 5 ராசிக்கு பண மழை பொழியும், பதவி உயர்வு கிட்டும்! -
சிக்கன் மலாய் கபாப் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
சீரக நீர் Vs சியா விதை நீர் - இவற்றில் உடல் எடையை குறைக்க சிறந்தது எது? -
12 ஆண்டுகள் கழித்து ஜூலை 16-ல் உருவாகும் 'குரு ஆதித்ய ராஜயோகம்': இந்த 6 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்க போகுது! -
மணமணக்கும்.. ஆட்டுக்குடல் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்படப் போறாங்களாம்
கம்பு தோசையும், தேங்காய், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
Kambu Dosa With Coconut And Tomato Chutney Recipe In Tamil: காலையில் என்ன டிபன் செய்வதென்று இன்னும் முடிவெடுக்கலையா? ஆரோக்கியமான மற்றும் சற்று வித்தியாசமான டிபன் காம்போவை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் தோசை பிரியர்களா? வீட்டில் கம்பு மாவு உள்ளதா? அப்படியானால் கம்பு தோசை சுடுங்கள். இந்த கம்பு தோசைக்கு தக்காளி சட்னியும், தேங்காய் சட்னியும் அருமையான காம்பினேஷனாக இருக்கும். இந்த டிபன் காம்போவை வீட்டில் செய்தால், அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த கம்பு தோசை, தேங்காய் சட்னி மற்றும் தக்காளி சட்னி ரெசிபி குறித்து அபூர்வாஸ் விருந்து என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு கம்பு தோசை, தேங்காய் சட்னி மற்றும் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கம்பு தோசை, தேங்காய் சட்னி மற்றும் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தோசை மாவிற்கு...
* கம்பு மாவு - 1 கப்
* கோதுமை மாவு - 1/4 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தேங்காய் சட்னிக்கு..
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* சின்ன வெங்காயம் - 5
* பூண்டு - 2 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 2
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* புதினா - 15 இலை
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
தக்காளி சட்னிக்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 10
* பூண்டு - 7-8 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* தக்காளி - 4 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு..
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி,
கட்டிகளின்றி, தோசை மாவு பதத்திற்கு மாவை கரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அந்த மாவை மூடி வைத்து, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் சட்னி செய்யலாம். அதுவும் தேங்காய் சட்னிக்கு மிக்சர்
ஜாரில் துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை
மிளகாய், சுவைக்கேற்ப உப்பு, பொட்டுக்கடலை, புதினா மற்றும் சர்க்கரை
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய்
சேர்த்து தாளித்து, தேங்காய் சட்னியுடன் சேர்த்தால், சுவையான ஹோட்டல்
ஸ்டைல் தேங்காய் சட்னி தயார்.
* அடுத்து தக்காளி சட்னிக்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1
டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாயை சேர்த்து நன்கு
வறுக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு, இஞ்சியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்தால், சுவையான தக்காளி சட்னி தயார்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை ரவா தோசை போன்று அள்ளி ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி,
முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், மொறுமொறுப்பான கம்பு தோசை
தயார்.



Click it and Unblock the Notifications