Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
மதியம் 20 நிமிஷத்துல சமைச்சு முடிக்கணுமா? அப்ப இந்த மாதிரி ஒரு பிரியாணி செய்யுங்க.. சைடு டிஷ்ஷே வேணாம்..
Kalyana Veetu Veg Biryani Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் சாதம், சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என்று செய்ய முடியாது. அவ்வப்போது சற்று வித்தியாசமாக சமைத்தால் தான் சமைப்பவர்களுக்கு சரி, சாப்பிடுபவர்களுக்கும் சரி நன்றாக இருக்கும்.
அதுவும் உங்களுக்கு மதிய வேளையில் டக்கென்று சமையலை முடிக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால், வீட்டில் பல காய்கறிகள் இருந்தால், அவற்றைக் கொண்டு ஒரு வெஜ் பிரியாணியை செய்யுங்கள். அதுவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு கல்யாண வீட்டு ஸ்டைலில் வெஜ் பிரியாணி செய்தால், அதற்கு சைடு டிஷ் எதுவுமே தேவைப்படாது மற்றும் வீட்டில் உள்ளோர் தட்டு தட்டாக வாங்கி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு வெஜ் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜ் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி - 1/2 கிலோ (15 நிமிடம் நீரில் ஊற வைத்தது)
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 2
* அன்னாசிப்பூ - 2
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 2
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சிறிது
* பீன்ஸ் - 5-6 (நறுக்கியது)
* கேரட் -1 (நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கெட்டி தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* புதினா - 1/2 கைப்பிடி
* மீல் மேக்கர் - 1 கப் (சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பின்
அதிகப்படியான நீரை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்)
* பிரியாணி மசாலா அல்லது கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* சுடுநீர் - 5 கப்
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை
ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரியாணி இலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
மற்றும் சிறிது உப்பு சேர்த்து தக்காளியை நன்கு மென்மையாக வதக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பச்சை
மிளகாய் சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து ஒருமுறை
கிளறி விட்டு, தயிரை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லி, புதினா சேர்த்து, அதோடு ஊற வைத்து பிழிந்து
வைத்துள்ள மீல் மேக்கரை சேர்த்து நன்கு 2-3 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் பிரியாணி மசாலா அல்லது கரம் மசாலாவை சேர்த்து கிளறி,
சுடுநீரை 5 கப் ஊற்றி, நீரை கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை மட்டும்
வடிகட்டி சேர்த்து நன்கு கிளறி விட்டு, உப்பு சுவை பார்த்து,
வேண்டுமானால் உப்பு சேர்த்து, குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து, 2
விசில் விட்டு இறக்கினால், சுவையான கல்யாண வீட்டு வெஜ் பிரியாணி
தயார்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications











