Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
1 கப் கடலைப்பருப்பு இருந்தா சூப்பரான இனிப்பை செஞ்சு கொடுங்க... எல்லோருக்குமே ரொம்ப பிடிக்கும்...!
Kadalai Paruppu Sweet Bonda Recipe in Tamil: குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஈவினிங் ஸ்னாக்ஸ் கொடுக்க வேண்டும் என்பது தான் அதிகளவிலான பெற்றோரின் விருப்பம். சில நேரத்தில் ஆரோக்கியமாக கொடுக்கும் உணவுகள் குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை.
பெரும்பாலும் குழந்தைகள் இனிப்பு சார்ந்த உணவு வகைகளையே விரும்புவார்கள். அதற்கு ஏற்ப நாம் ஆரோக்கியான பதார்த்தங்களை இனிப்பாக கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். நமக்கும் நமது கவலை குறையும். சரி வாங்க ஆரோக்கியமான இனிப்பான கடலை பருப்பு ஸ்வீட் போண்டா எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- உளுத்தம் மாவு - 100 கிராம்
- அரிசி மாவு - 20 கிராம்
- எண்ணெய் - தேவையான அளவு (பொரிக்க)
- உப்பு - ஒரு சிட்டிகை
பூரணம் செய்ய:
- கடலைப் பருப்பு - 200 கிராம்
- தேங்காய் - 1 மூடி
- ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
- வெல்லம் - 150 கிராம்
- நெய் - 1 டீ ஸ்பூன்
செய்முறை:
- முதலில் கடலைப் பருப்பை இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.
- அதை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக வேக வைத்து ஆற விடவும்.
- பின் அதை நன்றாக கைகளில் மசித்தோ அல்லது மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்தோ எடுத்து கொள்ளவும்.
- தேங்காயை துருவி தனியாக வைத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வெல்லம் நன்றாக கரையும் வரை வைத்திருக்கவும்.
- பின் அதை தூசி இல்லாமல் வடித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- அதை மசித்து வைத்த பருப்புடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
- அதை அடுப்பில் வைத்து அதனுடன் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- பின் சிறிதளவு நெய் சேர்த்து கிளறி பூரண பதம் வந்ததும் இறக்கிவிடவும்.
- கையில் சிறிதளவு எண்ணெய் தடவி கொண்டு, பூரணத்தை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
- உளுந்தம் மாவு, அரிசி மாவு, மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கிளறவும்.
- அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- பின் உருட்டி வைத்த பூரண உருண்டைகளை கரைத்த மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.
- அதே போல் எல்லா உருண்டைகளையும் பொரித்து எடுத்தால் சுவையான கடலை பருப்பு ஸ்வீட் போண்டா ரெடி!



Click it and Unblock the Notifications
