Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கடலைப்பருப்பு குருமாவை செய்யுங்க... ஊத்தி ஊத்தி குடிப்பாங்க..
Kadala Paruppu Kurma Recipe In Tamil: இன்று காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? இன்னும் அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று முடிவெடுக்கவில்லையா? எப்போதும் இட்லி, தோசைக்கு சட்னி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று குருமா செய்யுங்கள்.
அதுவும் கடலைப்பருப்பு குருமாவை செய்தால், இட்லி, தோசைக்கு ஊற்றி ஊற்றி சாப்பிடுவார்கள். அவ்வளவு அட்டகாசமான சுவையுடன் இருக்கும். முக்கியமாக இந்த குருமா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். அதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு கடலைப்பருப்பு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடலைப்பருப்பு குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்/ 1 கையளவு
* வரமிளகாய் - 7
* பூண்டு - 2 பல்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கல்பாசி - 1 துண்டு
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* தேங்காய் - 1/2 மூடி
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பை சேர்த்து, நிறம் மாற வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், பூண்டு, சோம்பு, கல்பாசி சேர்த்து வறுக்க
வேண்டும்.
* அதன் பின் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின்பு தக்காளியை சேர்த்து, அத்துடன் புளியையும் சேர்த்து நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாகும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு
தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, மிதமான தீயில் வைத்து 5 நிமிடம்
நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், கடலைப்பருப்பு குருமா தயார்.



Click it and Unblock the Notifications
