Latest Updates
-
பார்லர் போகாமலே பளபளப்பான முகம் வேண்டுமா? இதோ 5 சூப்பரான சந்தன ஃபேஸ் பேக்குகள்! -
நியூமராலஜி படி இந்த 5 எண்கள் கோடீஸ்வரராக்கும் ஆற்றலும், சக்தியும் கொண்டவையாம் - எந்தெந்த எண்கள் தெரியுமா? -
டீக்கடை மெது பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஈவ்னிங் டைம்-ல ட்ரை பண்ணுங்க.. -
இந்த படத்தில் உங்க கண்ணுக்கு முதலில் என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவர்ன்னு சொல்றோம்.. -
Vastu Tips: வாஸ்து படி வீட்டின் இந்த இடத்தில் அல்லது திசையில் செருப்பை வைத்தால் துரதிர்ஷ்டம் விடாம துரத்துமாம -
2027-க்கு முன் சுக்கிரன் இந்த 3 ராசிக்காரர்களை செல்வந்தராக்க போறாரு.. உங்க ராசி இதுல இருக்கா? -
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பிரைவேட் சேனல் எது? அந்த சேனல் யாருடையது தெரியுமா? -
கல்யாண வீட்டு புடலங்காய் பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
தீபாவளிக்கு சுட்ட முறுக்கு இருந்தா அதை வைச்சு இப்படி கார குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சமையலுக்கு எந்த எண்ணெய் பெஸ்ட்? எந்த எண்ணெயைத் தவிர்க்க வேண்டும்? மருத்துவர் தரும் விளக்கம்!
ருசியான... ஜீரா சிக்கன்
Jeera Chicken In Tamil: நீங்கள் சிக்கன் பிரியரா? அடிக்கடி வீட்டில் சிக்கன் வாங்கி சமைப்பீர்களா? அப்படி சமைக்கும் போது ஒரே மாதிரியான சுவையிலேயே சிக்கனை சமைத்து சாப்பிடுவீர்களா? அடுத்தமுறை சிக்கனை வாங்கும் போது, அதில் சற்று வித்தியாசமான சுவையில் சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் ஜீரா சிக்கனை செய்யுங்கள்.
இந்த ஜீரா சிக்கன் சீரகத்தின் மணத்தைக் கொண்டிருக்கும் மற்றும் இது ஒரு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். முக்கியமாக வீட்டில் சாம்பார் வைத்து, ஜீரா சிக்கனை சைடு டிஷ்ஷாக சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு ஜீரா சிக்கனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜீரா சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ (ஓரளவு நீளத் துண்டுகளாக
வெட்டியது)
* தண்ணீர் - 1/2 கப்
* எலுமிச்சை சாறு - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
மற்றும் நெய் சேர்த்து சூடேற்ற வேண்டும்.
* பின் அதில் சீரகத்தைப் போட்டு தாளிக்க வேண்டும்.
* அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள்
மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* பின் அதில் சிக்கனைக் கழுவிப் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு கிளற வேண்டும்.
* பின்னர் அதில் நீரை ஊற்றி, மிதமான தீயில் வைத்து 10-15 நிமிடம் மூடி
வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் ஆனதும், மூடியைத் திறந்து, தீயை அதிகரித்து, ட்ரையாகும்
வரை நன்கு கிளறி இறக்கி, மேலே எலுமிச்சை சாற்றினைப் பிழிந்துவிட்டால்,
சுவையான ஜீரா சிக்கன் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
